சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 2 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளை படைத்தவர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதேப் போல 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளை பெறும் எழுத்தாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தமிழில் இந்தாண்டுகான பால சாகித்ய புரஸ்கார் விருது ”ஒற்றைச் சிறகு ஓவியா” என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவ புரஸ்கார் விருது ”கூத்தொன்று கூடிற்று” என்ற சிறுகதை தொகுப்புகாக மதுரையை சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version