செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தலையில் காயத்துடன் வந்த குடிபோதையில் இளைஞர் செய்த அட்ராசிட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவத்தில் கடுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று மாலை செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை முடித்துவிட்டு, வெளியே சென்ற பிரபாகரன் சக நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
பின்னர், அவர் தங்கி உள்ள அறைக்கு சென்றுபோது கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மது போதையில் கீழே விழுந்து உள்ளார் அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மருத்துவமனையில் இவர் அதிக அளவில் குடித்து உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர்கள் திணறி உள்ளனர். பின் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்த பிரபாகரன் அருகில் உள்ள ஒரு குட்டையில் குதித்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள், குட்டையில் விழுந்த பிரபாகரனை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குடிபோதையில் இளைஞரின் இந்த அட்ரா சிட்டியால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
