பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தின் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடியும் நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

முதர்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள், அக்டோபர் 18ம் தேதி வேட்பு மனு மீது பரிசீலனை, அக்டோபர் 20ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என்றும் அக்டோபர் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும், 21ம் தேதி வேட்பு மனு மீது பரிசிலனை நடைபெறும் என்றும், அக்டோபர் 23ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலம என்றும், நவம்பர் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கையும் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில முதற்கட்ட தேர்தல்

அக் 10 – வேட்பு மனு தாக்கல்
அக் 17 – வேட்பு மனு இறுதி நாள்
அக் 18 – வேட்ப மனுக்கள் பரிசீலனை
அக் 20 – திரும்ப பெற கடைசி நாள்
நவ 6 – வாக்குப்பதிவு
நவ 14 – வாக்கு எண்ணிக்கை

பீகார் மாநில 2-வது கட்ட தேர்தல்

அக் 13 – வேட்பு மனு தாக்கல்
அக் 20 – வேட்பு மனு இறுதி நாள்
அக் 21 – வேட்ப மனுக்கள் பரிசீலனை
அக் 23 – திரும்ப பெற கடைசி நாள்
நவ 11 – வாக்குப்பதிவு
நவ 14 – வாக்கு எண்ணிக்கை

Share.
Leave A Reply

Exit mobile version