பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று மாலை 4.00 மணியளவில் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது.
அதன்படி, முதற்கட்ட தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவுக்கான இறுதி நாள் அக்டோபர் 17ஆம் என தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அக்டோபர் 18ஆம் தேதி வேட்ப மனுக்கள் பரிசீலனையும், அக்டோபர் 20ஆம் தேதி வேட்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதேபோல், 2-வது கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல், வேட்பு மனுவுக்கான இறுதி நாள் அக்டோபர் 20ஆம் என தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அக்டோபர் 21ஆம் தேதி வேட்ப மனுக்கள் பரிசீலனையும், அக்டோபர் 23ஆம் தேதி, திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இரண்டாவது கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.