ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் சாட் லெ க்ளோஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆடவருக்கான 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டியில், அவரது அணி 3:13.99 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் சாட் லெ க்ளோஸ் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், காமன்வெல்த் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற வீரர்/வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கீயோன் 14 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சாட் லெ க்ளோஸ் 19 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சுடுதல் வீரர் பில் ஆடம்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மிக் கவுல்ட் ஆகியோர் தலா 18 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

34 வயதான சாட் லெ க்ளோஸ், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தனது 18-வது வயதில் அறிமுகமாகி, அப்போதே 5 பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்தார். தற்போது ஐந்தாவது முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், இதுவரை 7 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை குவித்து, காமன்வெல்த் நீச்சல் வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களில் பதித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version