கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம்..
மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..

கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும்.

கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version