தேர்தல் கால வாக்குறுதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரணை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜாக் ) அமைப்பு சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்த முயன்றனர். தொடர்ந்து ஆசிரியர்களும் காவல்துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version