திருப்பத்தூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் எர்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்த தயாநிதி என்பவர் ஓசூரில் தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கந்திலி பகுதியை சேர்ந்த சராதா என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
சாரதாவை தயாநிதியின் தாயார் மற்றும் அவரது அக்கா, மாமா ஆகியோர் அடிக்கடி ஆபாசமாக திட்டி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேப் போல், குழந்தை இல்லை எனவும் சுட்டிக்காட்டி திட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சாரதா கடந்த 13-ம் தேதி மாலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சாரதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் தயாநிதி, தாயார் அமுதா உட்பட் 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
