நாடு முழுவதும்2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் இடங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 441 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 63,296 எம்பிபிஎஸ் இடங்களும், 382 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 73,643 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன. மொத்தமாக 823 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,36,939 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த கல்வியாண்டில் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாட்டில், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 5,199 இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 150 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 5,349 ஆக உயர்ந்துள்ளன.

அதேபோல், 41 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 7,850 இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 800 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 8,650 இடங்களாக உயர்ந்துள்ளன.

இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 78 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 13,049-இல் இருந்து 13,999 ஆக உயர்ந்துள்ளன.

மாநில வாரியாகப் பார்க்கும்போது, 15,395 எம்பிபிஎஸ் இடங்களுடன் கர்நாடகா முதலிடத்திலும், 14,000 இடங்களுடன் உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், 13,999 இடங்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version