Author: Editor TN Talks
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது சதத்தை விளாசினார். தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 18, ரோஹித் சர்மா 57, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது சதத்தை பதிவு செய்தார். 102 பந்துகளில் 103 ரன்களை கோலி அடித்தார். இதில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும். சதத்தை பதிவு செய்தபிறகு அதிரடியாக கோலி விளையாடினார். அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்சரை விளாசிய அவர், 120…
ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பவர்கள் கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை பெற்றுக் கொள்ளும் வசதி ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு போன்ற காரணங்களால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விரைவு ரயில்களை பொருத்தவரை, ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே போர்வை, தலையணை வழங்கப்படுகிறது. இதற்கிடையே, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் போர்வை, தலையணை வழங்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கட்டணம் செலுத்தி போர்வை, தலையணை பெற்றுக் கொள்ளும் வசதியை சென்னை கோட்டத்தில் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் இருந்து செல்லும் நீலகிரி,…
சபரிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இதுவரை 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் 18 மலைகள் புடை சூழ அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இதை சுற்றி எல்லாப் பாதைகளுமே காடுகளுக்குள் அமைந்துள்ளதால் பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் பக்தர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால், வன விலங்குகளிடம் இருந்து ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பதில் வனத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும், பெரிய வழிப்பாதையில் அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை என வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அழுதை முதல் பம்பை வரை குடிநீர், கழிவறை மற்றும் பக்தர்களுக்கு தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, பாம்புகளில் இருந்து பாதுகாக்க 12 சான்றளிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக வனத்தை பற்றி நன்கறிந்த…
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஓமன் அணியை 17-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடர், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், கனடா, என மொத்தமாக 24 அணிகள் மோதி வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று சென்னையில் 4 போட்டிகளும் மதுரையில் நான்கு போட்டிகளும் நடைபெற்றன. சென்னையில் இன்று துவங்கிய போட்டியில், பிரான்ஸ் – கொரியா, ஆஸ்திரேலியா – பங்களாதேஷ், சிலி-ஸ்விட்சர்லாந்து மற்றும் ஓமன் – இந்தியா அணிகள் மோதின. சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஃபிரான்ஸ் அணி கொரியா அணியை எதிர்கொண்டது. இதில் 11-1 என்ற கோல்…
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் இதுவரை 557 பேர் உயிரிழந்து உள்ளனர். மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று கடந்த 26-ம் தேதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ளனர். 620 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 290 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3.11 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 18-ம் தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளது. ‘டியூட்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் ‘ரெட்ட தல’ படக்குழு தங்களது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள். தற்போது முன்பு அறிவித்த தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து, கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘ரெட்ட தல’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக ‘ரெட்ட தல’ உருவாகி இருக்கிறது. இதனை திருக்குமரன் இயக்கியுள்ளார். ஸ்டைலிஷ் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷின் 100-வது படமான இதை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள இதிலிருந்து, அடியே அலையே, ரத்னமாலா ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. பொங்கலை முன்னிட்டு ஜன.14-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். அதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் உமேஷ் காலமானார். அவருக்கு வயது 80. கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐம்பது ஆண்டுகால திரைப் பயணத்தில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கன்னட சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் உமேஷ். 1960-ஆம் ஆண்டு வெளியான பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘மக்களா ராஜ்யா’ படத்தில் அறிமுகமான உமேஷ், தனது அசாத்தியமான நகைச்சுவை திறன், தனித்துவமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புக்காக கன்னட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார். 1975-ஆம் ஆண்டில் வெளியான ‘கதா சங்கமா’ திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக மாநில விருது இவருக்கு வழங்கப்பட்டது. நகரா ஹோல், குரு சிஷ்யரு, அனுபமா, கமனா பில்லு, அபூர்வ சங்கமா, ஸ்ருதி செரிதாகா, ஷ்ரவண பந்து, மலாயா மருதா உள்ளிட்ட படங்களில்…
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியானதாகவும், 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் சென்னையில் இன்று (நவ.30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டிட்வா புயல் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 149 கால்நடைகள் உயிரிழந்தன. 57 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், மயிலாடுதுறையில் 8000 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் 234 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 38 நிவாரண முகாம்கள்: தமிழகத்தில் மழை பாதிப்பு அதிகமுள்ள 9…
மதிய உணவு எவ்வளவுதான் விமரிசையானதாக இருந்தாலும் அதாவது, விதவிதமான குழம்பு, ரசம் ஊற்றி சாப்பிட்டாலும், இறுதியில் கொஞ்சம் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் தான் பலருக்கும் திருப்தி அடையும். தயிர் நாவிற்கு சுகத்தை கொடுப்பது போல, உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், பலருக்கும் தினசரி தயிர் சாப்பிடலாமா என்ற கேள்விகள் இருக்கும். அந்த வகையில், யாரெல்லாம் தயிர் சாப்பிடக்கூடாது மற்றும் தினசரி உணவில் தயிர் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். புரோபயாடிக்குகளின் வளமான ஆதாரம்: தயிர் தரும் நன்மைகளில் முக்கியமானது அதன் புரோபயாடிக் உள்ளடக்கம். புரோபயாடிக்குகள் என்பவை குடலின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை, செரிமானத்திற்கு உதவும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தயிரை தினமும் சாப்பிடுவது இந்த பயனுள்ள பாக்டீரியாக்களை ஆதரித்து மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற…