Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 
    தமிழ்நாடு

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    Editor web3By Editor web3January 6, 2026Updated:January 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pongal spl buses
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஏதுவாக மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது .

    இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஏதுவாக மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 தேதி முதல் 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மொத்தம் 11.35 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நான்கு நாட்கள் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 8.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருந்தனர். அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் ஆறு நாட்கள் சிறப்புகள் இயக்க திட்டம்

    ஜன.9 ம் தேதி 3142 பேருந்துகள், 10ம் தேதி 3122 பேருந்துகள், 11ம் தேதி 2347 பேருந்துகள், 12ம் தேதி 4292 பேருந்துகள், 13ம் தேதி 4882 பேருந்துகள், 14ம் தேதி 5012 பேருந்துகள் என மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப ஜன.16 முதல் 19ம் தேதி வரை 15,188 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமாக இயக்கப்படும் 8368 பேருந்துகளுடன் 6820 பேருந்துகள் இயக்க முடிவு.

    16ம் தேதி 2864, 17ம் தேதி 3507, 18ம் தேதி 3100, 19ம் தேதி 3602 பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்பதிவு வசதி: முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in  போன்ற இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ் அப் எண் 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே Know your bus  என்ற வசதி மூலம் அறிந்துகொள்ளலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெனிசுலாவில் அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தலா?. டிரம்ப் சொல்வது என்ன?
    Next Article கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.
    Editor web3
    • Website

    Related Posts

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    June 3, 2026

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.