Author: Editor TN Talks
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழகத்தை புறக்கணிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.29) திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு: தீர்மானம் 1: மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் . தீர்மானம் 2: “புதிய ரயில் திட்டங்களும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை” என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 3: பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 4: கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம்…
கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பமாக, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதலமைச்சர் பதவி யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. அந்த தேர்தலில் கட்சியை வழிநடத்திச் சென்ற டி.கே.சிவக்குமார் தான் முதலமைச்சராக பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது காங்கிரஸ் தலைமை. மேலும், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்ற ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்படி, சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நவம்பர் 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் சிவக்குமாருக்கு இன்று காலை விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வரும் நிலையில், அதற்கு முன்பாக இந்தியா உடனான ஒரு முக்கிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராணுவ தளவாடங்கள் முதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் வரை, இருநாடுகளும் பல கூட்டு ஒப்பந்தங்களை கொண்டுள்ளன. இந்த சூழலில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இவர் டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். புடின் வருகைக்கு, இந்தியா உடனான RELOS – Reciprocal Exchange of Logistics Agreement (ரெலோஸ்) எனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 18, 2025 அன்று மாஸ்கோவில் இந்திய தூதர் வினய் குமார்…
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபவமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன், பசுபதி, மதன் குமார், லால், அமீர் என பல்வேறு துறை நட்சத்திரங்கள் நடித்து வெளியான பைசன் காளமாடன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி வணிக ரீதியில் நல்ல லாபத்தையும் பெற்றது. மிகத்தேர்ந்த இயக்கம் நடிப்பு இசை என அனைத்து ஏரியாக்களிலும் சிறப்பாக திரைப்படம் இருந்த பொழுதிலும் இந்த திரைப்படம் இன்னும் சற்று நல்ல வரவேற்பையும் கூடுதலாக லாபங்களையும் எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். தற்பொழுது இந்த திரைப்படம் நெட் பிக்ஸ் என்கிற ஓட்டிடி பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. Netflix OTT வலைதளத்தில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்கள் மத்தியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்திருக்கிறார். பைசன் காளமாடன் திரைப்படம் மிக…
டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லியில் குழந்தைகள் நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர். காற்று மாசு பாட்டால் டெல்லி மக்கள் சோர்வடைந்து, வெளியில் வர பயந்து வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் குழந்தைகள் நம் கண் முன்பாகவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும்போது நாட்டின் பிரதமராக மோடியால் எப்படி அமைதி காக்க முடிகிறது? இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க அரசு ஒரு உருப்படியான அவசர திட்டத்தை வகுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற வேகமோ, பொறுப்போ இல்லை. டெல்லியில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெல்லியின் மோசமான காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் தேவை. காற்றின்…
பாமகவை அபகரிக்க முயற்சிப்பதாக அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நடந்த பாமக கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது: நான் வளர்த்த கட்சியை அவர் (அன்புமணி) அபகரிக்க முயற்சிக்கிறார். தேர்தல் ஆணையத்தையே அவர் விலை கொடுத்து வாங்கி விட்டார். தேர்தல் ஆணையம் விலை போய் விட்டதாக அங்குள்ள அதிகாரியே தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்படி அவர் கூறினார். அதன்படியே பாமக தொடர்பான தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். பாமகவின் தலைவர் நான்தான். அவரது தலைவர் பதவி காலாவதியாகி விட்டது. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். இதை என் மக்கள் அறிவர். ஆனால் நீ பேசுவதெல்லாம் நீ பொய். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என நீ நினைக்கிறாய். அது நடக்காது. எனது மக்கள் என்னுடனேயே இருக்கிறார்கள். கட்சித் தொடங்கியபோது, நான் 1 ஓட்டு போடுங்கள். 1 ரூபாய் கொடுங்கள் என…
ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படத்தினை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகினார் சுந்தர்.சி. இதனால் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ‘ரஜினி173’ படத்தினை தயாரிக்கவுள்ளது ராஜ்கமல் நிறுவனம். இதனால் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் கூறிய கதை ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே பிடித்திருக்கிறது. இதனால் விரைவில் இந்தக் கூட்டணி உருவாகும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். ரஜினி – ராஜ்கமல் நிறுவனம் – ராம்குமார் கூட்டணி குறித்த அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிகிறது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த…
துல்கர் சல்மான் நடித்து வரும் படத்துக்கு ‘ஐ அம் கேம்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘RDX’ இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்துக்கு ‘ஐ அம் கேம்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை முன்வைத்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதன் கதையினை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுதியிருக்கிறார்கள். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் ஷஹபாஸ் ரசீத் எழுதியிருக்கிறார்கள். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். இது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 40-வது படமாகும். இதில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார்கள். இதன் ஆக்ஷன் காட்சிகளை…
உபர் நிறுவனமும், ரோபோடேக்ஸிஸ் மற்றும் ரோபோபஸ்கள் போன்ற சுய-ஓட்டுநர் வாகனங்களை உருவாக்கி பயன்படுத்தும் தன்னியக்க ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வி ரைட் ( We Ride) நிறுவனமும் இணைந்து சவுதி அரேபியாவில் ரோபோ டேக்ஸி கொண்டு வந்துள்ளது. இந்த ரோபோ டேக்ஸியில் ஓட்டுனர் இல்லாமல் தானாகவே நிர்ணயத்த இலக்கை சென்றடையும். முழுக்க முழுக்க ரோபோடெக்னாலஜி சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ டேக்ஸி தற்பொழுது சவுதி அரேபியாவில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த ரோபோ டேக்ஸியில் 20 சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உள்ளன. தற்பொழுது சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ரோபோ டேக்ஸிகள் அனைத்தும் WeRide நிறுவனத்தின் GXR மாடல் (Geely இன் Farizon SuperVan ஐ அடிப்படையாகக் கொண்டது). இந்த ரோபோ டேக்ஸியில் ஐந்து பேர் வரை பயணிக்கலாம். ஆரம்பத்தில், இந்த ரோபோ டேக்ஸிகள் அபுதாபியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான யாஸ் தீவின் 12 சதுர மைல் முழுவதும்…
டித்வா புயல் காரணமாக இன்று எங்கெல்லாம் கனமழை, அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அதிகனமழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அதிகனமழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை…