Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மத்திய அரசால் தமிழகம் வஞ்சிப்பு – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
    அரசியல்

    மத்திய அரசால் தமிழகம் வஞ்சிப்பு – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழகத்தை புறக்கணிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது.

    சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.29) திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு:

    தீர்மானம் 1: மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் .

    தீர்மானம் 2: “புதிய ரயில் திட்டங்களும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை” என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 3: பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 4: கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 5 : கருணாநிதி பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்யவும் பார்லியில் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 6 : செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 7: நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 8 : 3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி திட்டத்தின் நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 9 : மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 10: இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 11: பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் 12 :கிராமப்புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடக அரசியலில் ‘திடீர்’ திருப்பம் – ஒற்றுமையாக இருப்பதாக சித்தராமையா, டிகே சிவக்குமார் கூட்டாக பேட்டி
    Next Article திமுக எம்பிக்களுக்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்: ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.