Author: Editor TN Talks
செங்கோட்டையன் பயணித்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முற்பகல் 12.30 மணிக்கு இண்டிகோ விமானம் கோயம்புத்தூர் புறப்பட்டது. இந்த இண்டிகோ விமானத்தில் நேற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு கோயம்புத்தூரில் தரையிறங்க வேண்டும். ஆனால் கோயம்புத்தூர் வர வேண்டிய இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்த விமானத்தில் கோயம்புத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வானிலை சரியானவுடன் பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு மாலை 4.15 விமானம் வந்தடைந்தது. திமுக நிர்வாகிகள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர்…
நல்லதே நடக்கும் 29.11.2025 விசுவாவசு 13 கார்த்திகை சனிக்கிழமை திதி: நவமி இரவு 11.16 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 2.20 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: ஹர்ஷணம் காலை 9.23 வரை. பிறகு வஜ்ரம். நாமகரணம்: பாலவம் காலை 11.51 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் பின்னிரவு 2.20 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: மகம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: காலை 9.00-10.30 எமகண்டம்: மதியம் 1.30-3.00 குளிகை: காலை 6.00-7.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 9 பரிகாரம்: தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று, அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மருத்துவர் ராமதாசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்த முரண்பாடுகளை தீர்க்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்” என்று ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான ‘மாம்பழம்’ ஒதுக்க வேண்டும்…
மேஷம்: திட்டமிட்ட பணியை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ரிஷபம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். சிம்மம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும்.…
புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் காரணமக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாளை (நவ.30) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கனமழையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் செயல்படுகிற அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.29) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை நேற்றே அறிவித்தது. மேலும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக, அரியலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள…
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நேற்று (நவ. 28) தொடங்கியது. டிசம்பர் 10ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. 6 பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ் கோர்சில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரையில் நேற்று (நவ. 28) காலை தொடங்கிய முதல் லீக் போட்டியில் ஜெர்மனி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் வார்விக் 19வது மற்றும் 56வது நிமிடங்களிலும், பென் ஹாஸ்பேச் 43வது நிமிடத்திலும், பால் கிளான்டெர் 44வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு…
இந்தியா- இலங்கை மகளிர் அணிகள் மோதும் T20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டிசம்பர் 21ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதே மைதானத்தில் 2வது போட்டி டிசம்பர் 23ம் தேதி நடைபெறுகிறது. அடுத்த 3 போட்டிகள் 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி கோவாவில் தொடங்கியது. விமர்சையாக நடைபெற்ற விழா இன்றுடன் (நவ. 28) நிறைவு பெற்றது. விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டன. இந்தநிலையில், சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளில், முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்தார். 50 ஆண்டுகள் திரைப்பயணம் வேகமாக ஓடிவிட்டதாக குறிப்பிட்ட ரஜினி, சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புவதாக தெரிவித்தார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நடிகராகவே…
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பின் தற்போது முதல்முறையாக கோபிச்செட்டிப்பாளையத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட செங்கோட்டையனுக்கு அவரே எதிர்பார்த்திடாத அளவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பேசிய வார்த்தைகள் ஏற்கனவே பேசப்படும் சில யூகங்களுக்கு மேலும் தூபம் போடுவதாக இருக்கிறது. அத்தகைய பேச்சையும் அந்த யூகங்களையும் அந்த யூகங்களை தொக்கி வரும் தகவல்களையும் இங்கு பார்க்கலாம். கடந்த நவ.27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதன் பின்பு அவரிடம் எதிர்பார்த்திராத பல்வேறு கருத்துக்களை செய்தியாளர்களிடையே பேசினார். “ஆண்டவன் தண்டிப்பான்” என்ற எடப்பாடி பழனிசாமிக்கான எச்சரிக்கை; இத்தனை வருடமாக பயணித்த அதிமுகவும், எதிரியாக பார்த்து வந்த அதிமுகவும் தற்போது ஒன்று தான் என்ற கருத்து; புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் வெல்வார், தவெக ஆட்சியை பிடிக்கும் உள்ளிட்ட கருத்துக்களை இத்துணை காலமாக அதிமுகவில் பயணித்த மூத்த அரசியல்வாதியின்…
விஜய்யின் தவெக கட்சியில் சேர திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்கள் தவெகவுக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறதே, தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; “நான் செங்கோட்டையனை பெரிதும் மதிக்கக்கூடியவன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்றுதான் சொல்ல முடியும். செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் தவெகவுக்கு செல்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. என்னை பொறுத்தவரை ஒரே கட்சிதான். மரணித்தாலும், என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படுமே தவிர, நான் யார் வீட்டின் முன்பும் சென்று காத்திருக்கமாட்டேன். என்னை பொறுத்தவரை புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அதிமுக; எலி என்பது எந்தெந்தக் கட்சிகள் என்பது உங்கள் யூகத்திற்கு உட்பட்டது. புலிக்கு வாலாக இருப்பதையே நான் வாழ்நாள்…