Close Menu
    What's Hot

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெகவில் இணையத் திட்டமா? ஜெயக்குமார் மறுப்பு
    அரசியல்

    தவெகவில் இணையத் திட்டமா? ஜெயக்குமார் மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யின் தவெக கட்சியில் சேர திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்கள் தவெகவுக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறதே, தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.
    அவற்றுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; “நான் செங்கோட்டையனை பெரிதும் மதிக்கக்கூடியவன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்றுதான் சொல்ல முடியும். செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் தவெகவுக்கு செல்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. என்னை பொறுத்தவரை ஒரே கட்சிதான். மரணித்தாலும், என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படுமே தவிர, நான் யார் வீட்டின் முன்பும் சென்று காத்திருக்கமாட்டேன்.
    என்னை பொறுத்தவரை புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அதிமுக; எலி என்பது எந்தெந்தக் கட்சிகள் என்பது உங்கள் யூகத்திற்கு உட்பட்டது. புலிக்கு வாலாக இருப்பதையே நான் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருப்பது பயன்படாத விஷயம். திமுக, தவெக என எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. நான் என்றும் அதிமுக தான்.
    அதிமுக என்பது மாபெரும் இயக்கம். தொண்டர்களை உருவாக்க முடியாது. ஆனால், தலைவர்களை உருவாக்கிவிடலாம். 25 வருடமாக எனக்கு எம்.எல்.ஏ. எனும் அங்கீகாரம் கொடுத்தவர்கள் ராயபுரம் தொகுதி மக்கள். எனவே, தொகுதி மாறுவது என்பதெல்லாம் நடக்காது. கட்சி உத்தரவிட்டால் நிச்சயம் ராயபுரம் தொகுதியில்தான் நிற்பேன். பதவிக்காகவும், பணத்திற்காகவும் பல் இளிக்கும் ஆள் நான் கிடையாது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த கட்சியில் சிறு துரும்பாக தொடர்ந்து செயல்படுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் அவசரகதியில் செம்மொழி பூங்கா திறப்பு – ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்
    Next Article செங். கொடுத்த சிக்னல்! ‘ஷாக்’கில் இ.பி.எஸ்? ‘தவெக’வுக்கு தாவும் அடுத்த முக்கியப்புள்ளி?
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    June 14, 2026

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    June 14, 2026

    பாமர மக்களுக்கான பரிந்துரைகளை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டோம் – அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    இந்தியா கூட்டணியில் பதற்றம்: ராகுலின் அணுகுமுறை சரியாக இல்லை..!! பினராயி விஜயன் சாடல்..!!

    HOMEMAKERS தான் டார்கெட்..!! இந்தியாவில் AI ரோபோக்களுக்கு ‘மனிதப் பார்வை’ தரும் புதிய வேலை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.