Author: Editor TN Talks
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று சென்னையில் கட்சி சம்பந்தமான முக்கிய செய்தியை செய்தார்கள் மத்தியில் கூறியுள்ளார். “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்ட பொழுது அனைத்து மக்களிடமும் திமுக அரசின் மீதான கோபத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் அனைவரும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். திமுக அரசின் மீது கடும் கோபத்தில் அவர்கள் இருப்பதோடு இந்த ஆட்சியை அகற்று வேண்டும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே திமுக ஆட்சியை அகற்றும் பணியில் எங்களது கட்சிக் கூட்டணி அமையும். அதாவது திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியுடன் பாமக கட்சி இடம் பெறும்”, என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் திமுக அரசு கொடுத்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாடி உள்ளார். மேலும் 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி…
அரை நூற்றாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கட்சியின் மூத்த பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவரது இந்த அரசியல் மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் மக்களிடையே தொடர்ந்து நாளுக்கு நாள் பேசுபொருளாக இருக்கிறது. இது சம்மந்தமாக பல்வேறு விவாதங்கள் நடந்து வண்ணம் இருக்கிறது. இன்று சென்னையில் செங்கோட்டையன் அவர்களை சில பத்திரிகைகள் சூழ்ந்து ஒரு சில கேள்விகளை கேட்டனர். உங்களைத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், “நான் நேற்று தான் அரை நூற்றாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கட்சியின் மூத்த பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள்…
“செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். இந்நிலையில், அமைச்சர் ரகுபதியிடம், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம். அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர். தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்தான் செங்கோட்டையன். அந்த அசைன்மென்ட்டில் தான், அவர் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து. கட்சியை விட்டு ஒரு தலைவர் வரும்போது, மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான். செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தபோது, அவரை அமைச்சர் சேகர் பாபு நட்பு ரீதியில் கட்சிக்கு (திமுக) அழைத்திருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான் வரவில்லை” என்று கூறினார்.
“எம்ஜிஆர் வழியில் விஜய் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்” என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் கூறியதாவது: மக்கள் சக்தியுடன் 2026-ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமரும் வாய்ப்பு உருவாகலாம். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்” என்றார். மேலும் பேசிய அவர், “எம்ஜிஆர் இயக்கத்தை துவங்குகிறபோது, இது திரைப்படத்தைப் போல நூறு நாட்கள் தான் ஓடும் என சொன்னார்கள். ஆனால் அவருடைய ஆட்சியை இறுதிவரை யாராலும் வெல்ல முடியவில்லை. வரலாறு படைத்த ஒரு தலைவர். எம்ஜிஆர் வழியில் விஜய் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் மற்றும்…
14வது உலகக் கோப்பை ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டி மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, போலந்து, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஜெர்மனி ஏழுமுறை உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை கோப்பைகளை கைப்பற்றி உள்ளன. இந்த ஆண்டு ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியானது தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு சென்னையில் 7வது உலக ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று இந்தியா முதன்முறையாக கோப்பையை வென்றது. அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி கோப்பையை…
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய தொழில் நகரமான ஹாங்காங், பல லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நெருக்கடி மிகுந்த நகரமாக இருந்து வருகிறது. இந்நகரத்தின் தாய் போ மாவட்டத்தில் உள்ள, வாங் ஃபக் கோர்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்புகள், எட்டு கோபுரத் தொகுப்புகளுடன் 31 மாடிகள் உயரம் கொண்டதாக இருக்கிறது. இந்த குடியிருப்பில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 26) மூங்கிலால் சாரம் அமைத்து, தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, நண்பகல் நேரம் சுமார் 2:51 மணியளவில் எதிர்பாரா விதமாக ஒரு குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டு, அது வேகமாக பக்கத்தில் உள்ள மற்ற மாடிகளுக்கும் பரவியது. இவ்விபத்தில், நேற்றைய தினம் சுமார் 65 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது என தாய் போ மாவட்ட நிர்வாகம்…
டித்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘டித்வா’ (Ditwah) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த புயல் வருகிற 30ஆம் தேதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக, வருகிற 30 ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இந்த வழக்கில், தொடர்புடைய வழக்கறிஞர்களைக் கைது செய்தபோது, காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, பிப்.19-ம் தேதி நடந்த இந்த மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு கடந்த 28-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.88,600 ஆக குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று (நவ.28) தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.94,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து, ரூ.11,840-க்கு விற்கப்படுகிறது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.183 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ,1.83 லட்சமாகவும் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு ரூ.89.50 ஆக உள்ளது. இத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரைக்குடியில் நடைபெற்ற மாவீரன் தின மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழர்களை தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. குடித்து குடித்தே குனிந்தவர்கள் இனி எப்படி தலை நிமிர போகின்றனர். பக்கத்தில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்து கூட்ட நெரிசலில் இறந்தால் பரவாயில்லை என்கின்றனர். மரங்கள், மாடுகள் மாநாடு என்றால் சிரிக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம், கூத்தாடியை (நடிகரை) பார்க்கப்போய் இறந்தால் ரூ.10 லட்சம். மீனவர்கள் கொலை செய்யப்பட்டால் ஒரு ரூபாய்கூட அறிவிப்பதில்லை. குடும்பத் தலைவிக்கு ரூ.1,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000, தேர்தல் நெருங்குவதால் பொங்கலுக்கு வேட்டி-சேலை, ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை அறிவிக்க உள்ளனர். இலவசம் வாங்கும் நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர். நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.…