Author: Editor TN Talks
‘டித்வா’ புயல் காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ‘டித்வா’ புயல் வருகிற 30-ம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் விடுமுறை: இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மாணவர்களின் நலன் கருதி திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை…
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கை தீவின் மேற்பரப்பில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவ.17-ம் தேதி முதல் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்வதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. மழை, வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள பதுல்லா மாவட்டத்தில் உயிரிழப்பு…
இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் நவ.30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை 30-ம் தேதி அதிகாலை நெருங்கும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று (நவ.28) பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நாளை (நவ.29) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 30-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன்…
திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான டிசம்பர் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் வரை, அதாவது ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முதல் 3 நாட்கள், அதாவது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர், ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் டோக்கன்கள் இல்லாமல் கூட தரிசனம் செய்யலாம். மேலும் இந்த நாட்களில் தினமும் 15000 ரூ.300 சிறப்பு தரிசனமும், 1000 வாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் பெற்றவர்களுக்குக்கான தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.…
சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் கும்டா இணைந்து சென்னை ஒன் செயலி வாயிலாக ரூ.1,000 (கோல்டன் டிக்கெட்) மற்றும் ரூ.2,000 (டைமண்ட் டிக்கெட்) மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். தற்போது, மாநகர் போக்குவரத்துக் கழக முக்கிய பேருந்து நிலையங்களில் மாதாந்திர பயணச்சீட்டு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1000 மற்றும் ரூ.2000 மதிப்பிலான பயண அட்டைகள், சென்னை ஒன் செயலி வாயிலாக எங்கும் – எப்போதும் கைபேசியில் எளிதாக பெறக்கூடிய மின்னணு பயண அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. சென்னை ஒன் செயலி வாயிலாக பெறப்படும்…
சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள அம்பலத்தாடி கிராமத்தில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், அம்பலத்தாடி கிராமத்தில் சமீபத்தில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால பெருமாள் கோயில் அமைந்திருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் வினோத், கூறுகையில், “இந்த கிராமம் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமண குடியிருப்பாக இருந்ததாகத் தெரிய வருகிறது. அப்போது வழிபாட்டில் இருந்த பெருமாள் கோயில் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. ஆய்வின்போது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் கல்வெட்டுத் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து, ‘ஒன்று’ என்ற ஒரே சொல்லை மட்டுமே வாசிக்க முடிந்து உள்ளது. மேலும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட…
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஓட்டபிடாரம் தொகுதியில் தொழுநோய் மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்து அமைந்திருக்கிறது சோட்டையன்தோப்பு பகுதி. இந்த ஊர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு கீழ் வருகிறது. சமீபத்தில் இந்த பஞ்சாயத்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் இங்கு பஞ்சாயத்து தலைவர் கிடையாது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதிலும், ஆரோக்கியபுரம், சோட்டையன்தோப்பு மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடை வழியாக வெள்ளம் முறையாக செல்லாததால் அந்த பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் ஆரோக்கியபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜோசப் தொழுநோய் மருத்துவமனைக்குள் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்குள்ள தொழுநோயாளிகளும்…
ஆலங்குடி அருகே காதலித்த பெண்ணிற்கு நிச்சயம் ஆனதால், காதலனே காதலியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேலகளக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது திருமணத்திற்கு காவியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, காவியாவை வற்புறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் காவியா அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில், இரவு இருவரும்…
நல்லதே நடக்கும் 28.11.2025 விசுவாவசு 12 கார்த்திகை வெள்ளிக்கிழமை திதி: அஷ்டமி நள்ளிரவு 12.16 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 2.47 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: வியாகாதம் காலை 11.01 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: விஷ்டி நண்பகல் 12.29 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ஆயில்யம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: காலை 10.30-12.00 எமகண்டம்: மதியம் 3.00-4.30 குளிகை: காலை 7.30-9.00 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 7 பரிகாரம்: வெல்லம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். ரிஷபம்: பிரியமானவர் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர். மிதுனம்: குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கூட்டுத் தொழிலில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கடகம்: குடும்பத்தில் அமைதி காக்கவும். உறவினர்கள், நண்பர்களால் செலவுகள் வரக்கூடும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிம்மம்: பழைய கடனை தீர்க்க மாற்று வழி யோசிப்பீர்.…