Author: Editor TN Talks

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூலித் தொழிலாளிகள் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. காப்புலிங்கம்பட்டியை சேர்ந்தவர் 50 வயதான முருகன். கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 40 வயதுடைய மந்திரம் என்பவருடன் மது குடிக்க சென்றுள்ளார். இருவரும், செவ்வாய்க்கிழமை இரவில் தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு, அருகேயுள்ள பாருக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான கோமு வந்துள்ளார். அப்போது, தன்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் தான் காரணம் எனக் கூறி, மந்திரம் மற்றும் முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோமு, தான் மறைத்து வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து வந்துள்ளார். கையில் அரிவாள் வைத்திருந்ததை பார்த்ததும் மதுபான கூடத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் ஏதோ சும்மா மிரட்டுவதற்காக கையில்…

Read More

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவருக்கு சொந்தமான மகள் மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகளுக்கு துணையாக அவருடைய மனைவியும் அவருடைய மகளுடன் இணைந்து மதுரையில் வசித்து வருகின்றனர். இதனால் ஜேம்ஸ் பால் அவ்வப்போது நெல்லையில் இருந்து மதுரைக்குச் சென்று தன்னுடைய மனைவி மற்றும் மகளை சந்தித்து வருவார். தன்னுடைய வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஜேம்ஸ் தனது மொபைல் போனிலிருந்து வீட்டை கண்காணித்து கொள்வார். அதன்படி கடந்த நவம்பர் 24ஆம் தேதி மதுரைக்கு ஜேம்ஸ் சென்று இருக்கிறார். அவர் சென்ற மறுநாள் 25ஆம் தேதி வீட்டின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன், அங்கிருந்து தொலைபேசியில் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள நபரை அழைத்து தனது வீட்டில் சோதனை இடுமாறு கூறியிருக்கிறார். பக்கத்து வீட்டு நபர் சோதனையிடும் பொழுது ஜேம்ஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு…

Read More

ஆளும் திமுக தரப்பில் இருந்து செங்கோட்டையனிடம் கட்சியில் சேர்ந்தால், பல கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை சென்னையில் திமுக தலைமை சார்பாக மூத்த அமைச்சர் ஒருவர் இன்று காலை 2 முறை சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவில் சேரும்படி செங்கோட்டையனிடம் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவில் சேர்ந்தால், செங்கோட்டையனுக்கு கட்சியில் மாநில அளவில் நல்ல பதவி தரப்படுமென உறுதி அளிக்கப்பட்டதாகவும், 2026 தேர்தலில் அவருக்கும் அவரின் ஆதரவாளர்கள் 2 பேருக்கும் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமென கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 2026 தேர்தலில் போட்டியிட ஆகும் செலவை திமுக ஏற்கும் என்றும், கட்சியில் சேரும்பட்சத்தில் பல கோடி ரூபாய் (ரூ.500 கோடி வரை) தரத் தயாராக கட்சி இருக்கிறது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால்…

Read More

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் பாகம் 2 மிகப் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திரைப்படத்தில் ஒருபுறம் பாலையா நடிப்பதாகவும் மற்றொருபுறம் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தன. அவை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்பொழுது இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது. கோவையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தனை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் உடன் பேட்ட திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தது கூடுதல் தகவல். ஜெய்லர் படத்தின் தொடர்ச்சி என்பதால் ஏற்கனவே இந்த திரைக்கதையில் மோகன்லால் சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு ஆகிய முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். தற்பொழுது விஜய் சேதுபதி…

Read More

மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய சென்யார் புயல், இந்தோனேசியாவில் கரையை கடந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்ககடலில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதேபோல, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று,…

Read More

தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து தூய்மைப் பணியாளர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கு சென்னை…

Read More

“செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில், தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தால், நாம் எதுவும் சொல்ல முடியாது. செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியதாக செங்கோட்டையன் ஏற்கெனவே ஒருமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதிமுகவை பலவீனப்படுத்துவதை ஒரு செயல்திட்டமாக கொண்டு, பாஜக செயல்பட்டு வருகிறது. இது அதிமுகவுக்கும், தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல. இது குறித்து நான் தொடர்ந்து பேசிவருகிறேன். அதிமுக தலைமை இது குறித்து தீவிரமாக சிந்திக்கும் என நம்புகிறேன். ஆளுநர் திரும்பத் திரும்ப தமிழக…

Read More

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிட்டத்தட்ட 9 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் அவர்கள் இன்று தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவை அறிவித்த பின்னர் சென்னைக்கு விரைந்து சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு முன்பு பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று, அங்கு விஜயுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளார். இவையெல்லாம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடப்பதை பார்க்கையில் நிச்சயமாக செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதியாகிவிட்டது. தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனிடம் நிருபர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, செங்கோட்டை அவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்திருக்கிறார். எனவே கூடிய விரைவில், இன்னும் சரியாக சொல்லப்போனால் நாளையே இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். தற்பொழுது தமிழக…

Read More

பொம்மை முதலமைச்சர் என்று முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து விட்டதாக அண்மையில் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார். இதற்கு ஈரோடு விழாவில் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பச்சைத் துரோகி என பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், எக்ஸ் பக்க பதிவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார் அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது, எது நடந்தாலும் “ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல, “நான் டெல்டாக்காரன்” என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு, மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே, இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும்…

Read More

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று எழுச்சியுடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது. இதே நிலை வர்த்தக நேர முடிவு வரை காணப்பட்டது. முடிவில், வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 85,609 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் நிப்டி 320 புள்ளிகள் அதிகரித்து, 26,205 புள்ளிகளாக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று நிலவிய இந்த எழுச்சியால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

Read More