Author: Editor TN Talks
தவெகவில் செங்கோட்டையன் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர் அக்கட்சியில் சேர்ந்ததும் துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், கோபி தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். இதையடுத்து விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் நாளை அவர் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தத் தகவலை செங்கோட்டையன் மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. எனினும், தவெகவில் அவர் சேருவது உறுதி என்றும், அப்படி சேர்ந்ததும் அவருக்கு துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவிகளில் ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்றும் தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கோட்டையனை கோபி தொகுதியில் தவெக மீண்டும் களம் இறக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பச்சைத் துரோகி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நெல் ஈரப்பதம் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் சாடியிருந்தார். இதற்கு ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றியதாவது: தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. “நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார்…
அரசியலமைப்பு தினத்தையொட்டி,’மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந்தமானது அல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் செலுத்தும் அஞ்சலி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மை காத்துள்ளது. பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தெரிவித்துள்ளார்.
“அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தினத்தையொட்டி, அவர் வெளியிட்ட குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளம். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும். இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை விக்சித் பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கின்றன. அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது. 2014…
நவ.,29 ல் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத சூழலில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 6 நாட்களுக்கான மழை எச்சரிக்கை குறித்த விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (நவ.,26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ.,27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.,28ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை…
செங்கோட்டையன் தனது MLA பதவியை சற்று முன்பு ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அவரின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன? என்பது பற்றி வெளியாகி வரும் அரசியல் வட்டார தகவல்களை இங்கு பார்க்கலாம். “ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும்” என தொடர்ந்து கூறி வந்த செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தற்போது சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் முன்பே கூறப்பட்டது போல, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார் என்று ஒருபுறம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை மையப்படுத்தி எழுந்த தகவல்களை பொறுத்தவரை, தொலைபேசியில் Confrence Call வாயிலாக செங்கோட்டையனை விஜய்யிடம் பேச வைத்துள்ளார் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த உரையாடலில், “MGR உடன் பயணித்த உங்களை போன்றவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அண்ணா. தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என செங்கோட்டையனிடம் விஜய் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பொறுப்பு…
சுதந்திரப் போராட்ட தமிழ் வீரர் தீரன் சின்னமலையின் நம்பிக்கை தளபதியாக விளங்கிய சுதந்திரப் போராட்ட தமிழ் வீரரான பொல்லான் அவர்களின் திருஉருவச் சிலையை இன்று ஈரோட்டில் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார் https://x.com/mkstalin/status/1993587901465296920?t=K-tNqevk1M2wSHo4pFwoJg&s=09 திருஉருவச் சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைத்த மு க ஸ்டாலின், அந்த அரங்கில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குறித்து நிறைய விஷயங்கள் பேசினார். மு க ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவி குறித்து பேசியது : தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும், தீவிரவாத நிலை இருப்பதாகவும், தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சி இல்லை என்றும் இங்கே அனைவரும் ஆங்கிலத்தை தான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆளுநர் ரவி அவர்கள் கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது என்று மு க ஸ்டாலின் அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார். இது பற்றி விரிவாக பேசிய மு க ஸ்டாலின் “பாஜக ஆட்சியில்…
பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது. இது சம்பந்தமான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. இது சம்பந்தமாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி இத்திரைப்படம் குறித்தும் உடன் நடடித்த நடிகர்கள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறார். அதில் கௌரி கிஷன் குறித்து அவர் பேசியது, “படப்பிடிப்பு தளத்தில் நானும் கௌரி கிஷன் அவர்களும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் நடந்த சர்ச்சை ஒன்றில் அவர் மிக தைரியமாக பேசி தவறாக கேள்வி கேட்ட நிருபரின் வாயை அடைத்தார். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருப்பேனா என்று தெரியாது. நிறைய பேருக்கு இது மாதிரியான சூழ்நிலை நிகழும் ஆனால் அந்த இடத்தில் என்ன செய்வது என்று நிறைய…
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சற்றுமுன் நடந்து முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்காவின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 489 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 201 ரன்கள் ஆட்டம் இழக்க 288 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்சை செய்து தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி நேற்று 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 548 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நேற்று மாலை விளையாட தொடங்கிய இந்திய அணி இரண்டு விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் குறைந்தபட்சம் ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து…