Close Menu
    What's Hot

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»‘அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவீர்’ – குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
    இந்தியா

    ‘அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவீர்’ – குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     “அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு தினத்தையொட்டி, அவர் வெளியிட்ட குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளம். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.

    இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை விக்சித் பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கின்றன.

    அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது. 2014 ஆம் ஆண்டு, நான் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்து, ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணங்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

    இந்த அரசியலமைப்பு என்னைப் போன்ற பலருக்கு கனவு காணும் சக்தியையும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வலிமையையும் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது எக்ஸ் தளத்தில், “கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு நமது அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் போதே, குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. இந்தக் கடமைகளை நிறைவேற்ற நாம் எப்போதும் முயற்சிக்க வேண்டும். இது வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது செயல்கள் மூலம் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்த உறுதியேற்போம்”

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநவ.,29ல் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’!
    Next Article “அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்” – விஜய்
    Editor TN Talks

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.