Author: Editor TN Talks
தவெகவா, திமுகவா ? என்ற கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டபடி செங்கோட்டையன் பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த அவரிடம், தவெகவில் இணையப் போகிறீர்களா, திமுகவில் இணைய போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் நேரடியாக பதிலளிக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார். முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வைத்து திமுக அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனுடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால் திமுகவில் செங்கோட்டையன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2026 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் கால அட்டவணை வெளியீடு !!! ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் !!!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி t20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தொடங்கி மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை (மொத்தமாக 29 நாட்கள் ) நடைபெற இருக்கும் இத்தொடரில் மொத்தம் 40 போட்டிகள் அடங்கியுள்ளன. 20 அணிகள் பங்கேற்க இருக்கும் இத்தொடரை இந்திய மற்றும் இலங்கை இணைந்து நடத்த இருக்கிறது. மொத்தமாக எட்டு இடங்களில் (ஊட்டி மைதானம் ) நடைபெற இருக்கும் இத்தொடரில் மூன்று இடங்கள் இலங்கைக்கும் ஐந்து இடங்கள் இந்தியாவிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், எம்.ஏ. சிதம்பரம் மைதானம் (சென்னை), அருண் ஜெட்லி மைதானம் (புது தில்லி), வான்கடே மைதானம் (மும்பை), ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா) ஆர். பிரேமதாசா மைதானம் (கொழும்பு), சிங்கள விளையாட்டுக் கழக கிரிக்கெட் மைதானம் (கொழும்பு) மற்றும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் (கண்டி) ஆகிய எட்டு இடங்களில்…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை தங்கள் கட்சியில் சேர்க்க திமுக, பாஜக, தவெக ஆகியவை ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கினார். இதையடுத்து பாஜக மேலிடத் தலைவர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்தார். இதனால் பாஜகவில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். இதனால் திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், மறுபக்கத்தில் விஜய்யின் தவெக கட்சி தரப்பிலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் 3 கட்சிகள் தரப்பிலும் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் செங்கோட்டையன், திமுகவில் இணைவாரா அல்லது பாஜக அல்லது தவெகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், எந்நேரமும் விஜய்யின் தவெகவில் இணையக்கூடும் எனவும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும் எனவும் தகவல் வெளிவந்தபடி இருந்தது. இந்நிலையில், சென்னைக்கு இன்று காலை வந்த அவர், தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்எல்ஏ பதவி விலகலுக்கான ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
கணையம் (Pancreas) என்பது வயிற்றுக்குப் பின்னால், கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கு அடுத்ததாக அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பி செரிமானத்திற்குத் தேவையான நொதிகளையும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இது உடலில் ஒரு முக்கியமான உறுப்பு என்பதால், கணையத்திற்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த நிலை pancreatitis என்றழைக்கப்படுகிறது. அதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கத் தவறினால் கணையத்தில் கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். இது கணைய அழற்சி, நீரிழிவு மற்றும் கணைய புற்றுநோய் போன்ற ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். உடல் சில ஆரம்ப அறிகுறிகளைக் கொடுத்தாலும், கணையம் தொடர்பான நோய்கள் பெரும்பாலும் மற்ற நிலைமைகளுடன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. இதனால் என்ன பிரச்சனை என்பதை கண்டறிய தாமதமாகும். கணையத்தில் பிரச்சனை ஏற்பட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அறிகுறிகளையும் பார்க்கலாம். முதுகு வரை பரவும் வயிற்று வலி: கணைய செயலிழப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று…
தினமும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையான காய்கறிகளை வாங்கி அடுக்கி வைத்தாலும், பல சமயங்களில் அவற்றை சமைக்காமல் அப்படியே விட்டுவிடுவோம். அதிலும், இதுதான் கெட்டுப்போகாதே, மெல்ல சமைக்கலாம் என்ற அலட்சியத்தால் சில காய்கறிகள் நம் கவனத்தை இழந்துவிடுகின்றன. அந்தக் காய்கறிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு மற்ற காய்கறிகளைப் போல உடனடியாகக் கெட்டுப்போகாது என்பது உண்மைதான். ஆனால், நீண்ட நாட்கள் வைத்திருக்கும்போது அதில் மெல்லிய முளைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கும். அப்படி பார்த்திருக்கிறீர்களா? பலரும், அந்த உருளைக்கிழங்கை “கெடவில்லை, முளையை மட்டும் நீக்கிவிட்டு சமைக்கலாம்” என்று முளைகளை மட்டும் நீக்கி சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த முளை விட்ட உருளைக்கிழங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான ஆரோக்கியக் கேடு பற்றி பலருக்கும் தெரியவில்லை. முளை விட்ட உருளைக்கிழங்கில் உள்ள ஆபத்து என்ன? உருளைக்கிழங்கு முளைக்கும்போது, அதன் வேர் மற்றும் தண்டுப் பகுதிகளில் கிளைக்கோஅல்கலாய்டுகள் (Glycoalkaloids) என்னும் நச்சுப் பொருட்கள் உற்பத்தியாகின்றன.…
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (The RTE Act 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 (NCTE Act 1993) பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர்கள் பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற…
அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்த செங்கோட்டையன், இப்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் இருந்து சென்னைக்கு பறந்திருக்கும் செங்கோட்டையன், தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாகவும், விஜயை சந்தித்த பின்னர் அவரது கட்சியில் நாளை இணையப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 30ஆம் தேதி கோபி செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை மீண்டும் தொடங்குகிறார். அதற்கு முன்னதாகவே, செங்கோட்டையன் தனது முடிவை அறிவிப்பார் எனச் சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் மட்டுமின்றி முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் விஜய் பக்கம் சாயப்போவதாக பேச்சு எழுகிறது. அதிமுகவின் முகங்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் செங்கோட்டையன். மேலும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்துத் தந்த அனுபவமும் கொண்டவர். கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் கட்சி…
தவெகவில் இணைகிறீர்களா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சென்றது தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டிடிவி தினகரன் தலைமையில் ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்”, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ”அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என்றும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கிறது. அதிமுக ஒன்றிணையும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பலர் திமுக உள்ளிட்டக் கட்சிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இது ஒரு புறமிருக்க, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தேர்தல்களில் தோல்வியடைந்ததாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பகிரங்கமாக அறிவித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி செய்தியாளர்…
மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்துக்குள் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு, மேற்காசிய நாடான…