Author: Editor TN Talks
மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். ரிஷபம்: நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிலைத் தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் ஏற்படும். தன்னம்பிக்கை குறையும். மிதுனம்: நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை இருக்கும். சிறிது பண நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாதாரண பிரச்சினை கூட உங்கள் மனதைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக சில முடிவுகளை எடுக்கக் கூடும். கடகம்: வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகளுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கைத் துணைக்கான எதிர்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகளை நேரத்திற்கு முன்னதாக…
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய மலேசியா அரசு திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த திட்டம் முதல் முறை சட்டத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, தற்பொழுது மலேசிய அரசும் இதை பின்பற்ற இருக்கிறது. இணையவழி மிரட்டல், மோசடிகள் மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற ஆன்லைன் தீங்கிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தடையின் கீழ்,அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட் போன்றவற்றை பயன்படுத்தி சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் வயதைச் சரிபார்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார். 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அமைச்சரவை அங்கீகரித்த சமூக ஊடகத் தடை எப்போது மலேசியாவில் அமல்படுத்தப்படும் என்பதை திரு. ஃபட்சில் சரியாகக் கூறவில்லை. “அரசாங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கினால், மலேசியாவில் இணையம் வேகமாகவும், பரவலாகவும், மலிவு விலையிலும் இருப்பதை போல இனி இங்கே…
எழுத்தாளரும் இந்திய மக்களவை அமைச்சரான சு வெங்கடேசன் அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் குறைகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுத்து வைத்துள்ளார். சு வெங்கடேசன் அவர்கள் முன்னெடுத்து வைத்த குறைகளும் கோரிக்கைகளும் : ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே பட்ஜெட்டில், 2024- 25 நிதியாண்டில் புதிய வழித்தடத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 31,458. இதில் தெற்கு ரயில்வே துறைக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 301 கோடி மட்டும்தான். அதாவது மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் இது வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொடுத்து தெற்கு ரயில்வே துறையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வெறும் ஒரு சதவீதம் தருவது முறையல்ல. மேலும் 2020 ஆம் ஆண்டு…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்கிற பிரசார பயணம் நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது நயினார் நாகேந்திரன், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என இரண்டு முதலமைச்சர்களை தமிழகத்திற்கு தேனி கொடுத்ததால் தேனியை தனி மாவட்டமாக அறிவித்தது அதிமுக அரசு. மேலும் தேனி மாவட்டத்திற்கு மருத்துவ அரசு கல்லூரியும் கொடுத்துள்ளது. தற்பொழுது மத்திய அரசு சார்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு கீழ் ஒன்றரை லட்சம் பேருக்கு புதிய குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் தற்பொழுது லஞ்சம் ஊழல் திருட்டுதான் நடந்து கொண்டிருக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னும் திறக்கப்படவில்லை. திமுக அரசுக்கு இது சம்பந்தமாக எந்தவித அக்கறையும் இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் எப்படியாவது…
1976 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த விவேக் ஓபராய் 2002 ஆம் ஆண்டு கம்பெனி என்கிற திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய அப்பா சுரேஷ் ஓபராயின் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய சொந்த உழைப்பால் பட வாய்ப்பு பெற்ற பெருமை விவேக் ஓபாராய்க்கு உண்டு. கம்பெனி திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்வு செய்து இன்றுவரை ஒரு நல்ல நடிகராக வில்லன் ஆக பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார். என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ஸ்டாக் மார்க்கெட் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்தேன். அதை நன்கு கற்றுக் கொண்டேன். பின்னர் 20 முதல் 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தேன். என்னுடைய 19 வயதில் ஆரம்பித்த அந்த கம்பெனி மூலம் நான் ஈட்டிய வருவாய்…
தமிழ் இசையமைப்பாளர்களில் தற்பொழுது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் அனிருத் கூடிய விரைவில் ஒரு புதிய இசை கம்பெனியை திறக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கேரளா, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அனிருத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றன. அவருடைய பாடல்கள் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. குறிப்பாக அவர் நடத்தும் இசை கச்சேரி இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் ஹவுஸ் புல் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம். அதேசமயம் இசை கம்பெனிகளை பொருத்தவரையில் தற்பொழுது அது சம்பந்தமான வணிக வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரகிட்ட என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு இசை கம்பெனியை திறந்து இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் பாடல்கள் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அனிருத் வெகு விரைவில் தனக்கென ஒரு இசை கம்பெனியை திறக்கப்போவது ஏறக்குறைய…
2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஜாஸ்பிரித் பும்ரா விளையாட தொடங்கினார். இந்திய அணிக்கு மிக முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் அவர் நிறைய போட்டிகளில் இந்திய அணியின் நிலைமையை சிக்கலில் இருந்து நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதீத திறமை வாய்ந்த அவர் கடைசியாக இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஜாஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. கிட்டத்தட்ட 736 நாட்கள் ஆகியும் இந்திய அணி அவரை எந்த ஒரு நாள் தொடரிலும் சேர்க்கவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற நவம்பர் 30ம் தேதி துவங்க இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான தென்னாப்பிரிக்க…
சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரத்தில் உள்ள நியூமிஸ்மாடிகா ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 339 கிராம் எடை கொண்ட ஒரு தங்க நாணயம் கிட்டத்தட்ட நம் இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. ஸ்பெயின் நாட்டு மன்னர் மூன்றாம் பிலிப் ஆட்சிக்காலத்தில், 1609 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த தங்க நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 339 கிராம் எடை கொண்ட அந்த தங்க நாணயம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனதாகவும் பின்னர் 1950 ஆம் ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் போடப்படுகிறது. இந்த தங்க நாணயம் ஏலம் போவதற்கு முன்பு ரோமானிய பேரரசர் ஃபெர்டினாண்ட் iii சொந்தமான 100 டெகெட் நாணயம் ( Ducat Coin ) 22 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்பொழுது இந்த 339 கிராம் எடை…
குளிர்காலம் வந்தாலே சரும வறட்சி, உதடு வெடிப்பு, மந்தமான செரிமானம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் அழையா விருந்தாளியாக வந்துவிடும். இந்த சவால்களை எதிர்கொள்ள விலை உயர்ந்த பொருட்களைத் தேடுவதற்குப் பதிலாக, நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் ஒரு இயற்கையான பொருளே தீர்வாக அமையும் என்றால் நம்பமுடிகிறதா? நமது பாரம்பரிய தேங்காய் எண்ணெய், அதன் வியக்கத்தக்க ஆரோக்கியப் பண்புகளுடன், குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும். இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களை (MCTs) இது கொண்டுள்ளது. குளிர்காலத்தில் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்காக தேங்காய் எண்ணெயை எதற்காக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஈரப்பதத்தை தக்கவைக்கிறது: தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்புகளுக்காக பெயர்பெற்றது. குளிர்காலத்தில், குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்பட்டு, வறட்சி, அரிப்பு மற்றும் செதில் போன்ற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் நடுத்தர சங்கிலி கொழுப்பு…
அதிமுகவினர் அடுத்த 9 நாட்களுக்கு தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே வராமல், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை (SIR) கவனமுடன் செய்ய வேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), அதிமுகவினருக்கு கிடைத்த வரம் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் தற்போது எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எஸ்ஐஆர்-க்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. சிறுபான்மையினர் மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்களின் வாக்குகளை திட்டமிட்டு நீக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் எஸ்ஐஆர்…