Author: Editor TN Talks
அயோத்தி ராமர் கோயில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தின் மீது பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்து, கடந்தாண்டு ஜனவரி 22ம் தேதி பக்தர்கள் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதனிடையே ராமர் கோயிலின் 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தின் மீது பிரதமர் மோடி இன்று (நவ. 25) கொடியேற்றி வைத்தார். 20 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். இந்தக் கொடியில் ஸ்ரீராமரின் வீரம் மற்றும் பெருமையை குறிக்கும் விதம் ஒளிரும் சூரியன் மற்றும் ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள்…
குமரிக் கடல் மற்றும் இலங்கையையொட்டி பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே திசையில் இது நகர்ந்து, தெற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், குமரிக் கடல் மற்றும் இலங்கையையொட்டி பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவடையும் என்று…
‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, திரைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தி திணிப்பை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் விடுமுறையையொட்டி ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீலீலா தனது சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, திரைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோஃபியாவில் அஃபார் மாகாணத்தில் ஹேலிகுப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக இருந்த இந்த எரிமலை நேற்று (நவ. 24) வெடித்துச் சிதறத் தொடங்கி உள்ளது. பல கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்பு புகைகள் எழுந்தநிலையில், லாவா குழம்பும் வெளியேறி வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே ஹேலிகுப்பி எரிமலை வெடித்திருக்கும்நிலையில், அதன் சாம்பல் மேகங்கள், இந்தியாவின் வடமேற்கு பகுதி வரை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் வான் பரப்பில் எரிமலையின் சாம்பல் மேகங்கள் படர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லி, என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள்…
சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. அனிருத் இசை அமைக்கிறார். வட சென்னையின் பின்னணி கொண்ட கதைக் களத்தில் உருவாகி வரும் படத்தின் புரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘அரசன்’ படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தநிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது X தளத்தில் பதிவு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 மற்றும் 2ம் பாக திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று (நவ. 24) சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை இன்று (நவ. 25) அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 25) சவரனுக்கு ரூ.1,660 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.174-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று (நவ. 24) தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.110 சரிந்து ஒரு கிராம் ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் (அக்டோபர்)…
தகுதியான எந்த வாக்காளர் பெயரும் விடுபடாது!- மாநில தலைமை தேர்தல் அதிகாரி எந்த காரணத்தை முன்னிட்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) காலநீட்டிப்பு வழங்கப்படாது என்றும் திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி பணிகள் நிறைவு பெறும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLO) வழங்கிய படிவங்களை, பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகவும், அதில், 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளதகாவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி வரை மட்டுமே SIR பணிகள் நடைபெறும் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும்…
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ. 26) புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேஷியா மற்றும் அதையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப் பெறக்கூடும் என்றும், மேலும் அதே திசையில் நகர்ந்து, நாளை (நவ. 26) தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக…
நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். நான் பார்த்த வரையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு விஷயம் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும். சரியான விஷயங்களை மட்டும் தான் அவர் சொல்லுவார். ஏனென்றால் அவர் திரைப்படத்தின் டீசர் உருவாக்கத்தில் ஒரு விஷயத்தை சொன்னார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் அவர் பாடி வெளியான எனக்கென யாரும் இல்லையே பாடல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அந்தப் பாடல் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றால் நிச்சயமாக ஹிட் ஆகும். இந்த டீசர் அனைத்து…
துபாயில் புர்ஜ் பார்க்கில் உள்ள மாலில் கடிகாரங்கள் வாரம் ( Watch Week ) நடைபெற்று முடிந்தது. கடந்த வாரம் 19ஆம் தேதி துவங்கி நேற்று 23ஆம் தேதி வரை இந்த கடிகாரங்களின் கண்காட்சி நடந்தது. இந்த கடிகார கண்காட்சியில் 90க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் கடிகாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. TAG Heuer, Zenith, Hublot, Tudor, Roger Dubuis மற்றும் பலரிடமிருந்து புதிய மற்றும் உன்னதமான கடிகாரங்கள் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சிக்கு நடிகர் தனுஷ் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே நடிகர் தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கடிகாரம் என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன நினைவு வரும், கடிகாரங்களைப் பொறுத்தவரை தனுஷின் முதல் காதல் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தனுஷ் “ நான் பள்ளியில் படிக்கும் போது என் அம்மா எனக்கு…