Author: Editor TN Talks
புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரக் கொடி மரத்தில், மேள தாளங்கள் முழங்க, அர்ச்சர்கள் மந்திரங்கள் ஓத விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெற உள்ள தீபத் திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அதைத்தொடர்ந்து மாலையில் கோயில் பின்புறம் உள்ள…
ஜி20 உச்சி மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தென்னாப்பிரிக்க இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். இதைத்தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தியா- பிரேசில்- தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். தென்னாப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை நேற்று (நவ. 23) சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட உலக…
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் 92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனையாகிறது. நேற்று முன்தினம் (நவ. 22) தங்கம் விலை கிராமுக்கு, ரூ.170 அதிகரித்து ரூ.11,630-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் போன்றே வெள்ளி விலையும் உயர்வுடன் காணப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.172-க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்தநிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (நவ. 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சரிவுடன் தொடங்கி உள்ளது. தங்கம் ஒரு சவரன் ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து, ரூ.11,520-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்று என்டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் செயல்படும் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அசோக் சர்மா தலைமையிலான குழுவினர் பிஹாரின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பாலை சேகரித்து ஆய்வு செய்தனர். இதன்படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசாராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்டங்களில் 40 தாய்மார்களின் தாய்ப்பால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அனைத்து தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மூத்த மருத்துவர்கள் அருண்குமார், அசோக் கோஷ் கூறியதாவது: கங்கை நதியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் தாய்மார்களின் தாய்ப்பாலை பரிசோதனை செய்தோம். அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டது. கங்கை நதி நீர் மற்றும் நிலத்தடி நீரில்…
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: சிந்து நதிக்கு அருகிலுள்ள பகுதியான சிந்து மாகாணம் 1947-ல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்றது. அந்த பகுதியில் வாழ்ந்த சிந்தி மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். எல்.கே. அத்வானி போன்ற தலைவர்களின் தலைமுறையைச் சேர்ந்த சிந்தி இந்துக்கள், இந்தியாவிலிருந்து சிந்து பகுதி பிரிவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சிந்து இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்றும் சிந்து இந்தியாவிலிருந்து பிரிந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அத்வானி தனது நூலில் எழுதியதை குறிப்பிட விரும்பு கிறேன். சிந்துவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதுகின்றனர். இன்று, சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாகரிக ரீதியாக, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நிலத்தைப் பொறுத்தவரை, எல்லைகள் மாறக்கூடும். யாருக்குத் தெரியும், நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பலாம். இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் அவருக்கு 2026 தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி, ஆண்டுக்கொரு முறை அரசியல் கட்சிகள் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். இதன்படிஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு,பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பழனிசாமிக்கு வழங்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. மேலும், திமுக அரசின் அவலங்களாக ஏற்கெனவே…
தமிழ்நாடு காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க 38 காங்கிரஸ் மாவட்ட மேலிட பார்வையாளர்களை டெல்லி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸில் கட்சி ரீதியில் 77 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்ட தலைவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருந்து வருகின்றனர். இதனால் மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும் உழைப்பவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டும். வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. மகளிருக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, வெளிப்படையான முறையில் புதிய மாவட்டதலைவர்களை நியமிக்க காங்கிரஸ் டெல்லி தலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்துக்கு தொடர்பில்லாத 38 தலைவர்களை மாவட்ட மேலிட பாரவையாளர்களாக நியமித்துள்ளது. அவர்களும் நேற்று தமிழகம் வந்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: இந்த பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தில்…
தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கரூர், அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தேனியில் இருந்து சென்னை செல்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையம் வருகை தந்தார். ரயில் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தவெக கூட்டம் உள் அரங்கில் நடத்தியது குறித்து கேட்கின்றீர்கள். இதை அக்கட்சி தலைவரிடம் தான் கேட்க வேண்டும். கூட்டத்தில் பேசிய விஜய் மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அவரது கனவு நனவாகட்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதில் விடுபட்டால் மேலும் ஒரு வாய்ப்பாக புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்வதில் சிரமம் இருப்பது உண்மை தான். அதை இன்னும் எளிதாக்க வேண்டும். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். பீகாரில் எஸ்ஐஆர்…
பீகாரில் காங்கிரஸுக்குக் கிடைத்த வரலாறு காணாத தோல்வி, வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும் நிச்சயம் கிடைக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அந்நாட்டு அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமானின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “இலங்கைத் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ஜீவன் தொண்டமான், சிவகங்கை சீமையில் பெண் எடுத்திருப்பதன் மூலம் இரு தரப்புக்குமான தொப்புள் கொடி உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் கட்சி ரீதியாக நெருங்கிய தொடர்பு உண்டு” என்றார். பீகார் தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் தமிழர்களுடையது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”அது தவறான கருத்து. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பெண்கள் முன்னேற்றத்திற்காக முதற்கட்டமாக ரூ.10,000…