Author: Editor TN Talks

தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டது. இதற்கிடையே, நெல்லையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. எனவே வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர்…

Read More

இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி சதம் பதிவு செய்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாக அமைந்துள்ளது. குவாஹாட்​டி​யில் உள்ள பர்​ச​பாரா மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கார்​பின் போஷ் நீக்​கப்​பட்டு சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான செனுரன் முத்​து​சாமி சேர்க்​கப்​பட்​டார். அவர்தான் இப்போது சதம் விளாசி அசத்தியுள்ளார். காயம் காரண​மாக ஷுப்​மன் கில் வில​கிய​தால் இந்​திய அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் விளையாடி வருகிறது. இந்​திய அணி​யில் 2 மாற்​றங்​கள் இருந்​தன. ஷுப்​மன் கில், அக்​சர் படேலுக்கு பதிலாக சாய் சுதர்​சன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்​பிரிக்க அணி…

Read More

செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும்…

Read More

2025ஆம் SRO மோட்டார்ஸ்போர்ட் குழு விருது விழா இத்தாலில் உள்ள வெனிஸ் நகரத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.ரோமானிய பாரம்பரிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, விருது கொடுத்த விழா நடைபெற்ற கட்டிடம் வெனிஸ் பாணியின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் நவீன நிகழ்வு இடமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டிற்கான ஜென்டில்மேன் டிரைவர் “Gentleman Driver” விருதினை நடிகர் அஜித் குமாருக்கு SRO மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுவின் பிரசிடெண்ட் ஸ்டீபன் ரேடல் வழங்கினார். திரு. பிலிப் சாரியோல் ஒரு புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பாளர் மற்றும் பந்தய ஆர்வலர் ஆவார், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பந்தய விபத்தில் துயரமாக உயிரிழந்தார். திரு. பிலிப் சாரியோலின் நினைவாக அவரது மகள் கோரலி சாரியோல் அவர்களால் நிறுவப்பட்ட விருதுதான் இந்த ஜென்டில்மேன் டிரைவர் “Gentleman Driver” விருது என்பது குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்ற அஜித்குமார், “மறைந்த திரு பிலிப் சாரியோல்…

Read More

கான்பூரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் செய்த செயல் தற்பொழுது இந்திய மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் அபிஷேக் யாதவ். அவர் பீடா கடை வைத்திருக்கிறார். அன்றாடம் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை 12 மாதம் முழுவதும் தொடர்ந்து சிறுக சிறுக சேர்த்திருக்கிறார். சரியாக ஒரு லட்ச ரூபாய் சேர்ந்த பின்னர் அதை ஒரு நகைக்கடைக்கு கொண்டு சென்று, தன் மனைவிக்கு ஒரு தங்க சங்கிலியை வாங்கி இருக்கிறார். இது சம்பந்தமாக அந்த நகைக்கடை வியாபாரி கூறியது, “தங்கச் சங்கிலியை வாங்க திடீரென பையில் இருந்து பத்து ரூபாய் மற்றும் இருவது ரூபாய் நாணயங்களை அவர் அடுக்கி வைத்ததும் எங்களுக்கு ஆச்சரியமாகப் போனது. இவற்றை எங்களால் பெற முடியாது ஏன் வங்கியில் கூட இவ்வளவு நாணயங்களை வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினேன். அதற்கு அவர்…

Read More

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து கேப்டன் கில் வெளியேறினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தவுடன் வருகிற நவம்பர் 30 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்க இருக்கிறது. கில் வெளியேறிய நிலையில் இந்திய அணியை கே எல் ராகுல் வழிநடத்தப் போகிறார்.இன்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அச்செய்தியை வெளியிட்டு இருக்கிறது. https://x.com/BCCI/status/1992561040559894534?t=9Iq7DO_HeZWU4k5X4DadxQ&s=19 ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கின்றனர். அணியில் திலக் வர்மா, ருத்ராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் ஒரு நாள் அணி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் ஒரு நாள் போட்டி ராஞ்சியிலும்…

Read More

ஹம்பி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.[2] மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி, ஹோஸ்பெட் நகருக்கு அருகில் உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான விருபாக்ஷா கோயிலுடன் கூடிய ஹம்பி குழு நினைவுச்சின்னங்களை நடத்துவதற்கு இது பிரபலமானது. ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கர்நாடக மாநிலத்தில் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரமான ஹம்பி யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. எம்பி நகரத்தில் குறிப்பாக விருபாஷா கோயில் மற்றும் நிறைய நினைவுச் சின்னங்களை கண்டு களிக்கலாம். ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையில் விஜயநகர பேரரசின் தலைநகரமாக இந்த ஹம்பி நகரம் விளங்கியதாகவும் கூறப்படுகிறது. பல சிறப்புகள் நிறைந்த இந்த…

Read More

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கூட டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்ற பின்னர் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்று முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி மொத்தமாக 489 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக செனூரான் முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் நான்கு விக்கெடுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் மொத்தமாக முகமது சிராஜ் இரண்டு விக்கெடுகளை கைப்பற்றினார். குறிப்பாக போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த முத்துசாமியின் விக்கெட்டை முகமது சிராஜ் தான் கைப்பற்றினார். இன்று போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பின், “இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய வேகப்பந்து பேச்சாளர் என்கிற சாதனைக்கு சிராஜ்…

Read More

இந்திய திரை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்பிரிட் திரைப்படத்தின் பூஜை இன்று நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் புகழ் திரிப்தி திம்ரி நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகை மடோனா செபாஸ்டின், பிரகாஷ்ராஜ், நடிகை காஞ்சனா மற்றும் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அனைவராலும் டான் லீ என்று செல்லமாக அழைக்கப்படும் கொரியாவைச் சேர்ந்த பிரபல சர்வதேச நடிகரான மா டோங் சியோக் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்துள்ள பூஜையில் இத்திரைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி அவர்கள் துவங்கி வைத்தார். பூஜையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் புஷன் குமார், கிருஷண் குமார் மற்றும் பிராணாய்…

Read More

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7-ல் தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டுகிறது. அதனால், நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை அணை நீர்மட்டம் குறைந்தால் கடந்த காலத்தில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால், அன்றாட தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மதுரையின் குடிநீர் தேவையை மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம்…

Read More