Close Menu
    What's Hot

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
    இந்தியா

    ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi g20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

    தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உயர் செயல்திறன் கொண்ட கணினி திறன், கட்டமைக்கப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களை கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை, மனித மேற்பார்வை, பாதுகாப்பு, தவறான பயன்பாட்டைத் தடுப்பது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவானது மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும். இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும். ‘அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் 2026 பிப்ரவரியில் இந்தியா, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த முயற்சியில் அனைத்து ஜி20 நாடுகளும் இணைய அழைக்கிறேன்.

    செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்ற வகையில் நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. புதுடெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் திறன் பரிமாற்றம் குறித்து பேசப்பட்டது. வரும் ஆண்டுகளில் திறன் பரிமாற்றம் குறித்த உலகளாவிய கட்டமைப்புக் குழுவை உருவாக்க வேண்டும். நிலையான வளர்ச்சி, நம்பகமான வர்த்தகம், அனைவருக்கும் செழிப்பு ஆகியவற்றுடன் உலகளாவிய நல்வாழ்வில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇத்தாலியில் உள்ள வெனிசில் ஜென்டில்மேன் டிரைவர் பெற்ற நடிகர் அஜித்குமார் !!!
    Next Article செனுரன் முத்​து​சாமி சதம்: குவாஹாட்டி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய UPI அம்சம் அறிமுகம்..!!

    June 1, 2026

    12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.