Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் – டிச.7-ல் தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
    தமிழ்நாடு

    முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் – டிச.7-ல் தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    42327643 mk stalin 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7-ல் தொடங்கி வைக்கிறார்.

    மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டுகிறது.

    அதனால், நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை அணை நீர்மட்டம் குறைந்தால் கடந்த காலத்தில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால், அன்றாட தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மதுரையின் குடிநீர் தேவையை மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு 2034-ல் நகரின் தினசரி 317 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2049-ல் நகரின் தினசரி 374 மில்லியன் லிட்டர் குடிநீரும் தேவைப்படும் எனக் கூறியிருந்தது.

    அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து நேரடியாக மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தாமதத்தால் திட்டமதிப்பீடு 1,609.69 கோடியாக உயர்ந்துள்ளது. இடையில் சில காலம் முடங்கி கிடந்த இந்த திட்டம், சமீபகாலமாக வேகமெடுத்து நிறைவுபெறுவதற்கு மாநகராட்சி ஆணையர் சித்ரா முக்கிய காரணம். அவர் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி லோயர் கேம்ப், பண்ணைப்பட்டி ஆய்வுக்குச் சென்றும், அன்றாடம் இந்த திட்டப்பணி விவரங்களை அதி்காரிகளிடம் கேட்டு, விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

    வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நிறைவுபெற்ற வார்டுகளில் தினமும் அல்லது 2 நாளைக்கு ஒரு முறை சுகாதாரமான குடிநீரை மாநகராட்சி வழங்கி வருகிறது. டிசம்பர் 7-ம் தேதி மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தங்குடியில் நடக்கும் அரசு விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பணிகள் நிறைவுபெற்ற 85 வார்டுகளுக்கு தற்போது தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிதம்பரம் | போலீசை தாக்கிய பிரபல கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
    Next Article சந்தீப் ரெட்டி வங்கா – பிரபாஸ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.