Author: Editor TN Talks
கடந்த ஒரு வாரமாகவே எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் குறித்த விஷயம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. சுமார் 25 முதல் 27 கோடி ரூபாய் செலவில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அத்திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக எஸ் எஸ் ராஜமௌலி நடத்தி முடித்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கேரளா நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிக்கின்றனர். படத்திற்கு எஸ் எஸ் ராஜமௌலியின் ஆஸ்தான மற்றும் அவருடைய நெருங்கிய உறவினரான எம் எம் கீரவாணி தான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரது கூட்டணி ஸ்டுடென்ட் நம்பர் 1 தொடங்கி தற்பொழுது வாரணாசி வரை வந்து நிற்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ராஜமௌலி இயக்கிய அனைத்து படத்திலும் எம் எம் கீரவாணி தான் இசையமைப்பாளர். இவர்கள் இருவரும்…
இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்கள் மத்தியில் சசிகுமார், சிம்ரன் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கினார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்த அவர் அடுத்த திரைப்படத்தை எப்பொழுது இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க, சத்தமே இன்றி மிக குறுகிய நாட்களில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்தே முடித்து விட்டார். கடந்த மாதம் அவர் ஹீரோவாக களமிறங்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கியுள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த நடிகையான அனஸ்வரராஜன் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பெயர் வித் லவ் ( With Love ) என்று…
ஜி20 தலைவர்களின் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை (நவ. 21) விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அப்போது இந்திய நடன மற்றும் பாடல் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உற்சாகமாக கைதட்டி கண்டு ரசித்தார். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்ற உள்ளதாக வெளியுறவுத்துறை…
இந்திய விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம், துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்தியாவின் தரப்பில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இடம் பெற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் வட்டமடித்தும், தலைகீழாக சுற்றியும் பறந்து, பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது. வானில் பறந்து சாகசம் நிகழ்த்திருக் கொண்டிருக்கும் விமானங்களை கூடியிருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காதநிலையில், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரின் செல்போன்களில்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, தமிழகத்தையே அலறவிட்ட பவாரியா கும்பலை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யார் இந்த பவாரியா கும்பல்? பவாரியா கொள்ளையர்களின் அட்டூழியத்தை தமிழக போலீசார் ஒடுக்கியது எப்படி பார்க்கலாம் விரிவாக…! ‘பவாரியா கொள்ளையர்கள்’.. இந்த பெயரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கிய காலம். அந்த அளவுக்கு மிருகத்தனமான கொடூர கொலைகளையும் கொள்ளைகளையும் அரங்கேற்றி வந்தனர் ‘பவாரியா கொள்ளையர்கள்’. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தான் இந்த பவாரியாக்கள். ராஜபுத்திரர்கள் படைப்பிரிவில் மிக முக்கிய வீரர்களாக இருந்தவர்கள் பவாரியாக்கள். 1572ம் ஆண்டு முகலாய மன்னர் பாபரிடம், ராஜபுத்திரர்கள் போரில் தோற்க, அதற்கு காரணம் பவாரியாக்கள் தான் என கருதி, அவர்களை மேவார் ராஜா ‘ராணா சங்கா’ வனப்பகுதிக்கு விரட்டியடிதார். வேட்டைச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்த பவாரியாக்களை, 1871ல் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘குற்றப் பரம்பரை’…
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். கூடுதல் ஆணையரும், முன்னாள் டிஜிபி-யுமான எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை போலீசார் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை கைது செய்தது. குற்றவாளிகள் 2 பேர் வடமாநிலத்திலேயே என்கவுன்டர் செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஓமர் என்ற…
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலனுடன் நாளை மறுநாள் ( நவம்பர் 23 2025 ) திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி உலக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி நடந்த டி ஒய் பட்டில் மைதானத்திற்கு ஸ்மிருதி மந்தனாவை அவரது காதலரான பலாஷ் முச்சல் நேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த மைதானத்தில் வைத்து அவர் ஸ்மிருதி மந்தனாவிடம் திருமண ப்ரொபோசலை நடத்தி இருக்கிறார். ஸ்மிருதி மந்தனாவும் திருமணத்திற்கு சரி என்று சொல்ல இருவரும் மோதிரத்தை பரிமாறிக் கொண்டனர். அந்த திருமண ப்ரோபோசல் வீடியோ சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலாகி வருகிறது. https://x.com/thetatvaindia/status/1991772095756505107?t=6V-bY3tcTEQHSjqR0kChGA&s=19 ஸ்மிருதி மந்தனாவை கரம் பிடிக்கும் பலாஷ்…
சுயாதீனத் படங்களுக்கு திரையரங்குகளில் போதுமான இடம் கிடைக்கவில்லை என்பது 40 ஆண்டுகளாக எனக்குள் இருக்கும் கேள்வி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து கடந்தாண்டு வெளிவந்த ‘அமரன்’ திரைப்படம் ‘ஓபன் பீட்சர் பிலிம்’ பிரிவில் இன்று (நவ.21) திரையிடப்பட்டது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத்தினருக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவான இப்படம் மிகுந்த பாராட்டுகளையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் (ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்), இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்…
‘பிஹார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும்’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றில் தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. அவர்களுக்கு குடிநீர், கழிவுநீரோடை, சாலை, பேருந்து வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி பகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 2 மாதமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை. மலையிலிருந்து கீழே இறங்கி வந்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கூறுவதாக தெரிகிறது. இதுபோல் அப்பகுதிகளில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதியும் இல்லை. இது அப்பட்டமான மனித உரிமை…
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் மற்றும் சைனா வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம் சைனா வீரர்களும் ( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை ) கொல்லப்பட்டனர். இந்த சலசலப்பில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசு ஒரு அதிரடி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் சீன குடிமக்களுக்கான பெரும்பாலான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியது. வணிக மற்றும் மாணவர் விசாக்கள் மீண்டும் பகுதிகளாகத் தொடங்கப்பட்டாலும், சுற்றுலா வரம்பற்றதாகவே இருந்தது. ஆண்டுதோறும் இந்தியாவிற்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான சீன பார்வையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்த நிலையில், இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் நிறைய சீன மக்கள் இந்தியாவுக்கு வர முடியாமல் போனது. இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து விசா கட்டுப்பாட்டை இந்திய அரசு இன்று போக்கியுள்ளது.…