Close Menu
    What's Hot

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்; நீதிமன்றம் தீர்ப்பு!
    தமிழ்நாடு

    பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்; நீதிமன்றம் தீர்ப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bahavariyas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். கூடுதல் ஆணையரும், முன்னாள் டிஜிபி-யுமான எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை போலீசார் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை கைது செய்தது. குற்றவாளிகள் 2 பேர் வடமாநிலத்திலேயே என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

    முக்கிய குற்றவாளியான ஓமர் என்ற ஓம் பிரகாஷ் உள்பட 9 பேரை தனிப்படை கைது செய்தது. ஜாமினில் வெளியே வந்த 3 பெண்கள் தலைமறைவாகினர். ஓம் பிரகாஷ் உள்பட 2 பேர் சிறையிலேயே மரணமடைந்தனர். எஞ்சிய ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தண்டனை விவரங்களை வரும் 24ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஜெயில்தார் சிங் குறித்த தீர்ப்பும் அன்றைய தினம் கூறப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகக் கோப்பை வெற்றிக்கு பின் தனது காதலனை கரம் பிடிக்கும் ஸ்மிருதி மந்தனா
    Next Article யார் இந்த பவாரியாக்கள்?
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    July 21, 2026

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.