Author: Editor TN Talks
பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், மருதநாயகம் திரைப்படம் சாத்தியம் தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் இந்த ஆண்டு இந்திய பனோரமாவின் கீழ் திரையிட தமிழ்நாட்டில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன. அதன்படி சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ மற்றும் இவி கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ‘ஆநிரை’ என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரைப்பட உள்ளன. இதற்காக சென்னையில் இருந்து அமரன் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்…
ஜனநாயகயன் படத்தின் தெலுங்கு விநியோக உரிமை இவ்வளவுதானா ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் !! இளைய தளபதி விஜய் அரசியல் பாதையில் புதிய களம் கண்டுள்ளார். இதனால் அவர் நடித்து முடித்திருக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியான அந்த திரைப்படத்தின் முதல் பாடல் அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டும் அடித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தின் தமிழக திரைப்பட விநியோக உரிமை 100 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. அதேபோல ஓவர்சீஸ் விநியோக உரிமை சுமார் 78 கோடி ரூபாய்க்கும், கேரளா விநியோக உரிமை சுமார் 15 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. படத்தின் ஆடியோ ரைட்ஸ் 35 கோடி ரூபாய்க்கும், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் நிறுவனம் திரைப்படத்தின் OTT ( ஓவர் தி டாப் ஒளிபரப்பு – அதாவது சாட்டிலைட் மற்றும் கேபிளில் வெளியாவதற்கு முன்பாகவே…
“மாநில அரசின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதே நேரம் கால வரையின்றி மசோதாவை ஆளுநரும் கிடப்பில் போட முடியாது” என குடியரசுத்தலைவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு வகையில் நாட்டின் அரசியல் சூழலையே திருப்பிப்போடும் இவ்வழக்கின் தீர்ப்பு பற்றி இங்கு பார்க்கலாம். தற்போதைய தீர்ப்பிற்கு முன்னதாக நடந்த முக்கிய நகர்வுகளை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியிருந்த தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதையடுத்து…
பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா நடத்தி வரும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டு ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ரூ.7.5 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா அனுமதி வழங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்தநிலையில், ராபர்ட் வதேராவின் நிறுவனம், டிஎல்எப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு நிலத்தை விற்றது. கட்டுமான உரிமத்தையும் அந்நிறுவனத்துக்கே வழங்கியது. இந்தநிலையில், நில விற்பனையில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அதனடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் வத்ரா அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 2009ம்…
நேபாளத்தில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததன் காரணமாக அந்நாட்டில் பாரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு ஜென் சி இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் நிலவியதால் கோபமடைந்த இளைஞர்கள் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக வெடித்ததில் 76 பேர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த இளைஞர்கள் நேபாள நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களின் கட்டிடங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். பதற்றமான சூழலையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷர்மா ஒலி ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சர்களும் பதவி விலகினர். இதனையடுத்து சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதம் நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள்…
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோக்கா சாப்டர் ஒன் திரைப்படம் திரையிட்ட இடங்கள் எல்லாவற்றிலும் சக்கை போடு போட்டது. இந்திய துறையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு திரைப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. கேரளாவில் மற்றும் இந்த திரைப்படம் 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திரைப்படம் மலையாளத் திரையுலகில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது கூடுதல் சிறப்பு. கேரளத் திரையுலகில் இன்ட்ரெஸ்ட் ஹிட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் தற்பொழுது தமிழ் திரையுலகில், புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஏழாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் திரவியம் ( அறிமுகம் ) இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் எஸ் ஆர் பிரபு பங்கேற்றுக்கொண்டார். இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ம் ஆண்டு சன்னிதானம் மேற்கூரை மற்றும் வாசப்படி, துவார பாலகர் சிலை உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த 2019ல் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பிறகு, மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் தேவசம்போர்டு மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.…
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 முதல் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப் படைக்கு இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் காசா நகரின் கட்டிடங்கள் இடித்து நொறுங்கி சிதைத்து போயின. குழந்தைகள், பெண்கள் என 69,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்ததையடுத்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், கடந்த 19ம் தேதி முதல் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான் வழித்தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. இதன் மூலம் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக காசா அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே…
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் பயங்கரமாக வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக NIA நடத்திய விசாரணையில் காரை வெடிக்கச் செய்தது, மருத்துவர் உமர் நபி என்பதும், பின்னணியில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு- காஷ்மீரில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவப் பல்கலைக்கழக வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தநிலையில், டெல்லி செங்கோட்டை…
மனிதர்களான நாம் அனைவரும் நிச்சயமாக 90 வயது முதல் 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் அதே சமயம் இளமையாகவும், நலமாகவும் வாழ முடியும் என்று பெல்ஜியத்தைச் சேர்ந்த முதுமை தொடர்பான அறிவியல் ஆய்வாளர் எரிக் வெர்டின் கூறியுள்ளார். சராசரியாக மக்கள் 60 முதல் 75 வயது வரை தான் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மனது வைத்தால் 90 முதல் 95 வரை சீரான நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்த வயதானாலும் சரி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முறையான விஷயங்களை ( உடற்பயிற்சி செய்வது, சிறந்த சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது ) செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் என்றும் இளமையுடன்…