Author: Editor TN Talks

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவரது வீட்டில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் சென்று வருவதாக சிறப்பு புலனாய்வு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சி. ரவி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு…

Read More

 சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன. வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலர்​கள் வாக்​காளர்​களுக்கு கணக்​கீட்டு படிவங்​களை பூர்த்தி செய்​வதற்​கும் உரிய வழி​காட்​டு​தல்​களை​யும், ஆலோ​சனை​களை​யும் வழங்​கினர். பொது​மக்​கள் தங்​களது வாக்​குச்​சாடி மையங்​களாக செயல்​படும் பள்​ளி​களுக்கு காலை முதலே…

Read More

சட்​டப் பேர​வைத் தேர்​தலில் கோவை மாவட்​டத்​தில் பெரும்​பான்​மை​யான தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார். சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில் ‘உடன்​பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக அறி​வால​யத்​தில் சந்​தித்து பேசி வரு​கி​றார் திமுக தலை​வர் ஸ்டா​லின். இது​வரை 86 தொகு​தி​களின் நிர்​வாகி​களு​டன் ‘ஒன் டு ஒன்’ சந்​தித்து நேரடி ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். இந்த சந்​திப்​பின் போது, முன்​வைக்​கப்​படும் குறை​களை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்​கை​களை​யும் எடுத்து வரு​கிறது. அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது எஸ்​ஐஆர் பணி​கள் குறித்து முதல்​வர் விசா​ரித்​த​போது, “அதி​முக பிஎல்​ஏ2-க்​கள் யாருமே களத்​துக்கே வரு​வ​தில்​லை. நமது நிர்​வாகி​கள் மிக தீவிர​மாக பணி​களை செய்து வரு​கி​றார்​கள்” என நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். அதன்​பின், “கடந்த சட்​டப்​பேர​வைத்…

Read More

தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார். அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். அவருடன் முன்​னாள் எம்​.பி. சத்​தி​ய​பாமா மற்​றும் ஆதர​வாளர்​கள் வந்​திருந்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த செங்​கோட்​டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்​திப்​பீர்​களா?” என்று கேள்வி எழுப்​பிய​போது “அது சஸ்​பென்​ஸ், பொறுத்​திருந்து பாருங்​கள்” என்று பதிலளித்​தார். மேலும், “அதி​முக​வில் தொடர்ந்து போராட்​டம் நடை​பெற்று வரு​கிறதே?” என்று கேட்​டதற்​கு, செங்​கோட்​டையன் பதில் அளிக்​காமல் அங்​கிருந்து சென்​றார். நெல்​லை​யில் வஉசி நினைவு நாள் நிகழ்ச்​சி​யில் முதன்​முறை​யாக செங்​கோட்​டையன் கலந்​து​கொண்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர். தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது. எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின்…

Read More

கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்​களுக்கு நடை​பெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்​கிவைக்​கிறார். இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி இன்று மதி​யம் 1.25 மணிக்கு புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். கோவை விமான நிலை​யத்​தில் பிரதமரை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாஜக தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர். மேலும், கோவைக்கு வரும் பிரதமர் மோடியை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், ஐஜேகே தலை​வர் பாரிவேந்​தர் உள்​ளிட்​டோரும் வரவேற்க உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிரதமர் பலமுறை தமிழகத்​துக்கு வந்​த​போதும், அதி​முக பொதுச் செய​லா​ளர்…

Read More

மதுரை மற்றும் கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிவில், ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்று சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து…

Read More

31 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று அசுர வளர்ச்சியில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் தான் காக்னிசன்ட் ஐடி நிறுவனம். கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ( நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு ) 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  தற்பொழுது அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய கட்டமைப்பு, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை கண்காணிக்கும் வகையில் அந்த நிறுவனம் புதிய கருவியை கையாளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ரோஹேன்ஸ் என்ற பெயர் கொண்ட அக்கருவியை கொண்டு ஊழியர்கள் மடிகணினியில் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்களா அல்லது செய்யவில்லையா என்பதை அந்நிறுவனம் கண்காணிக்க போகிறது. இந்தக் ப்ரோஹேன்ஸ் கருவியின் உதவியை கொண்டு ஊழியர்கள் பயன்படுத்தும் மவுஸ் அல்லது கீபோர்ட் வாயிலாக ஊழியர்களின் நடவடிக்கையை அந்நிறுவனம் கண்காணிக்கும்.…

Read More

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தினை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரிக்கிறது. ’சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இப்படத்திலும் பாலகிருஷ்ணா – நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கமர்ஷியல் கதைகளை இயக்கி வெற்றி கண்டவரான கோபிசந்த் மாலினேனி இப்படத்தின் மூலம் வரலாற்று பின்னணிக் கொண்ட கதையினை இயக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

Read More

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்று வரும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர்…

Read More