Close Menu
    What's Hot

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    மயிலாப்பூரில் பரபரப்பு!. திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுக பிரமுகர் வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; உறவினரை வலைவீசி தேடும் சிறப்பு புலனாய்வு போலீஸ்
    தமிழ்நாடு

    அதிமுக பிரமுகர் வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; உறவினரை வலைவீசி தேடும் சிறப்பு புலனாய்வு போலீஸ்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    semmaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவரது வீட்டில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் சென்று வருவதாக சிறப்பு புலனாய்வு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சி. ரவி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்ட போது அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருவதும், அந்த வீட்டை தற்போது அதிமுக பிரமுகர் எம்.சி. ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் என்பவர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ரமேஷ் மீது ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை காவல் துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் வனத்துறை மூலம் மதிப்பீடு செய்தபோது, 106 செம்மரக்கட்டைகள் சுமார் 2 டன் என்பது உறுதியானது. இதன் மதிப்பீடு சுமார் 50 லட்சம் இருக்கலாம் என்று வனத்துறையினர் கணித்துள்ளனர். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையினரின் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்
    Next Article ”மோடி பீகாரில் ரூ.10 ஆயிரம் தந்தது போல் இங்கு ரூ.15 ஆயிரம் தரவும் வாய்ப்பு உள்ளது” – தயாராக இருக்க சீமான் அறிவுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    மயிலாப்பூரில் பரபரப்பு!. திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்!

    April 22, 2026

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! அலைமோதிய கூட்டம்..! வசூல் எவ்வளவு தெரியுமா?

    April 22, 2026

    தங்கம் விலையில் திடீர் சரிவு!. இன்றைய நிலவரம் என்ன?

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    மயிலாப்பூரில் பரபரப்பு!. திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்!

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! அலைமோதிய கூட்டம்..! வசூல் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் விலையில் திடீர் சரிவு!. இன்றைய நிலவரம் என்ன?

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    April 22, 2026

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.