Author: Editor TN Talks
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டெல்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது. செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரியவந்தது. ஆய்வு மேலும், அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காஸிகுந்த் பகுதியை சேர்ந்த ஜஸிர் பிலால் வானி,…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது என்றும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த பிறகும் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதே ஆடுகளத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த, முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது: “டெஸ்ட் கிரிக்கெட்டையே முற்றிலும் அழித்துவிட்டார்கள். முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை போன்றுதான் பல வருடங்களாக அமைத்து…
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள், இந்திய ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் புஜாரா சாடியுள்ளார். கொல்கத்தாவில் ‘ரேங்க் டர்னர்’ பிட்ச் வேண்டும் என்று கேட்டு விட்டு, பிட்சில் ஒன்றும் பெரிய பூதங்களெல்லாம் இல்லை என்றும் பேட்டர்களுக்கு டெக்னிக் பத்தாது என்றும் ஒரு பயிற்சியாளராக இருந்து கொண்டே கம்பீரினால் பேச முடிந்துள்ளது பற்றி பிசிசிஐ என்ன கருதுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் புஜாரா கூறியதாவது: இந்தியாவிலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணி மாற்றத்தில் இருக்கிறது என்றெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள், என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்னால் இந்த வாதத்தையை ஜீரணிக்க முடியாது. இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ தோல்வி அடைந்தால் மாற்றத்தில் இருக்கிறோம் என்று கூறிக்கொள்ளலாம்.…
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 136.3 ஓவர்களில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜித் 188 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 149 ரன்கள் விளாசி கார்த்திக் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். குருசாமி அஜிதேஷ் 86, சோனது யாதவ் 44 ரன்கள் சேர்த்தனர்.உத்தர பிரதேச அணி சார்பில் கார்த்திக் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த உத்தர பிரதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள்…
வடமாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெற்றி பெற சதித் திட்டத்தை மேற்கொண்டு வரும் பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர தயாராக இல்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கிற வகையில் பல்வேறு முயற்சிகள்…
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல… தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர்…
எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்துகொடுத்துவிட்டு போ எனச் சொல்வது எப்படிச் சரியாகும்? இதுவரை வாக்காளர்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தார்கள். ஆனால் இப்போது, ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள். இதுதான் எஸ்ஐஆர். திமுகபோன்ற கட்சிகளுக்கு அமைப்பு உள்ளது. அவர்கள் பணிகளை செய்கிறார்கள். எங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிகள் என்ன செய்ய முடியும்? இதனால், குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள். குடிமக்களுக்கான…
“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். 2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு திமுக-வுக்குச் சென்றார். அங்கே இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்துக்கு…
சமையல் சீக்கிரம் முடிய வேண்டும், ஆனால் சுவையாகவும் இருக்க வேண்டுமா? உங்களுக்காகப் பயனுள்ள மற்றும் அசத்தலான 20 சமையல் குறிப்புகள். படித்து தெரிந்து மறக்காமல் உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க! சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியில் கொஞ்சமாக தேங்காயையும் சோம்பையும் அரைத்துச் சேர்த்து, குழம்பு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்தால் குழம்பு கெட்டியாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும். காய்ந்த ஆரஞ்சு தோலை டீ தூளில் வைத்தால் டீ கூடுதல் ருசியுடனும் மணத்துடனும் இருக்கும். ஒரு கப் இட்லி மாவில், அரை கப் ஊறவைத்து அரைத்த ஓட்ஸ் மாவுடன் கலந்தால் இட்லி சாஃப்டாக வரும். எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிடுவதற்கு பதிலாக, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை ருசியாக இருக்கும். துவரம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து வேகவைத்தால் சீக்கிரமே பருப்பு வெந்து வரும். தோசைக்கல்லில்…
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நம்முடைய முகம் நமது ஒட்டுமொத்த ஹார்மோன் ஆரோக்கியத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் நுட்பமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை முகத்தில் தெரியும் சில அறிகுறிகள் மூலம் நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கியமான ஹார்மோன்களின் அளவு குறையும்போது, முடி, புருவம், கண், உதடுகள் மற்றும் கன்னங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நமது ஆற்றல், மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நலனையும் பேணுவதற்கு உதவும். அந்த வகையில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். முடி உதிர்தல் மற்றும் முன்நெற்றியில் முடி குறைதல்: முடி மெலிதல் அல்லது உச்சந்தலையில் முடி குறைவது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என Impact of Thyroid Dysfunction on Hair Disorders என்ற தலைப்பில் NCBI…