Close Menu
    What's Hot

    0 – 0 டிரா!. ஈக்வடாரை கதறவிட்ட குராசோ!. உலகக் கோப்பை வரலாற்றில் மிரட்டலான டிஃபென்ஸ்!

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»இந்த வாரத்திற்கான அசத்தலான சமையல் குறிப்புகள் – நோட் பண்ணிக்கோங்க!
    LIFESTYLE

    இந்த வாரத்திற்கான அசத்தலான சமையல் குறிப்புகள் – நோட் பண்ணிக்கோங்க!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    foods
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமையல் சீக்கிரம் முடிய வேண்டும், ஆனால் சுவையாகவும் இருக்க வேண்டுமா? உங்களுக்காகப் பயனுள்ள மற்றும் அசத்தலான 20 சமையல் குறிப்புகள். படித்து தெரிந்து மறக்காமல் உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க!

    1. சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியில் கொஞ்சமாக தேங்காயையும் சோம்பையும் அரைத்துச் சேர்த்து, குழம்பு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்தால் குழம்பு கெட்டியாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
    2. காய்ந்த ஆரஞ்சு தோலை டீ தூளில் வைத்தால் டீ கூடுதல் ருசியுடனும் மணத்துடனும் இருக்கும்.
    3. ஒரு கப் இட்லி மாவில், அரை கப் ஊறவைத்து அரைத்த ஓட்ஸ் மாவுடன் கலந்தால் இட்லி சாஃப்டாக வரும்.
    4. எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிடுவதற்கு பதிலாக, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை ருசியாக இருக்கும்.
    5. துவரம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து வேகவைத்தால் சீக்கிரமே பருப்பு வெந்து வரும்.
    6. தோசைக்கல்லில் சப்பாத்தி செய்த பிறகு, எண்ணெய் தடவி வைத்துவிட்டால் தோசை ஊற்றும் போது ஒட்டாமல் வரும்.
    7. பேக்கிங் சோடாவை டூத் பேஸ்டில் கலந்து டீ வடிகட்டியைத் தேய்த்தால் நீண்ட நாட்களாகப் படிந்திருந்த கரை நீங்கும்.
    8. கறிவேப்பிலையையும் வெந்தயத்தையும் வறுத்து பொடி செய்து இறுதியாகப் புளிக்குழம்பில் சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
    9. எந்த வெரைட்டி ரைஸ் செய்வதாக இருந்தாலும், தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    10. அடுப்பில் எண்ணெய் கறை அல்லது பிசுபிசுப்பாக இருந்தால், வாழைப்பழத் தோலை வைத்து தேய்த்தப் பின் ஈரத்துணியை வைத்துத் துடைத்தால் எண்ணெய் பசை நீங்கும்.
    11. கோதுமை மாவு அரைக்கும் போது, வெள்ளை கொண்டைக்கடலையையும் சேர்த்து அரைத்தால் மாவு சத்தானதாக இருக்கும்.
    12. எந்தப் பருப்பு வடை செய்வதாக இருந்தாலும், அதில் இஞ்சியைத் துருவிச் சேர்த்தால் வாயு, அஜீரணத் தொல்லை நீங்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
    13. முட்டையை குக்கரில் வைத்து 3 விசில் விட்டால் சீக்கிரமாகவே முட்டை வெந்துவிடும்.
    14. தயிருக்கு பதில், காய்ச்சி ஆறவைத்த பாலைச் சிக்கனில் சேர்த்து ஊறவைத்தால் சிக்கன் சாஃப்டாகவும் ஜூஸியாகவும் இருக்கும்.
    15. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் டிஷ் வாஷிங் லிக்விட்டைச் சேர்த்துப் பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
    16. புதினா சட்னி அரைக்கும் போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வறுத்து சேர்த்து அரைத்தால் ருசியும் சத்தும் கூடும்.
    17. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் கிராம்பைச் சொருகி வீட்டின் மூலைகளில் வைத்தால் பூச்சி வராது.
    18. துவரம் பருப்புடன் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்துச் சாம்பார் செய்தால் சுவை கூடும்.
    19. குழம்பு அல்லது கிரேவியில் உப்பு அதிகமாகிவிட்டால், தேங்காயைச் சின்னச் சின்னதாக நறுக்கிச் சேர்க்கலாம் அல்லது தயிர் சேர்க்கலாம்.
    20. சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தண்ணீரில் வேக வைக்காமல் ஆவியில் வேக வைத்தால் தான் அதன் இயற்கையான இனிப்புச் சுவை மாறாது
    foods#tips
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுகத்தில் தெரியும் ஹார்மோன் சமநிலையின்மை – ஆரம்ப அறிகுறிகள் இதோ!
    Next Article அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் ஆவேசம்
    Editor TN Talks

    Related Posts

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    0 – 0 டிரா!. ஈக்வடாரை கதறவிட்ட குராசோ!. உலகக் கோப்பை வரலாற்றில் மிரட்டலான டிஃபென்ஸ்!

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.