Author: Editor TN Talks
வங்கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும், வரும் 22-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.18) பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல், வரும் 23-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல்…
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்ற காரணத்துக்காக நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து மனித நேய மக்கள் கட்சியை நீக்கியதை எதிர்த்து, அக் கட்சியின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் அப்துல் சமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான். மதிமுக-வில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் திமுக-வில் இணைய வேண்டும் என்றே விரும்பினர். அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மாறும் என்பதால் அதை செய்யவில்லை. ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவது போல், ஒரு நாள் வைகோவும்…
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸின் செயல்பாடு மற்றும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் தயார் நிலை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில தலைவர்கள், மேலிட பொறுப்பாளர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிஹாரில் வாக்கு திருட்டு மற்றும்…
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலம் வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமி, மாநிலம் முழுவதும் 173 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ணங்களை மிகத் தெளிவாக பிரதிபலித்திருக்கிறார். திமுக-வுக்கு தமிழகத்தில் எதிர்மறை வாக்குஅதிகரிக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வு தான் காரணம். தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை இன்று நேரடியாக…
இடஒதுக்கீட்டு முறையை கண்டித்து போராடியவர்களுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேச அரசுக்கும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான இந்த போராட்டத்தை வங்கதேச அரசு தீவிரமாக ஒடுக்கியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பதற்றம் அதிகரித்ததை உணர்ந்த வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப் படுகொலை, ஊழல் உள்பட ஏராளமான வழக்குகளை…
2023 – 2025 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நடப்புச் சாம்பியன் அணியான தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ( 1-1 ) என்ற கணக்கில் சமன் செய்து, தற்பொழுது இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. முதலாவதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சுப்மன் கில் தலைமையில் இளம் பட்டாளத்துடன் இந்திய அணி நடப்பு சாம்பியன் அணியான தென்னாப்பிரிக்க அணியை சவால் மிக்க மைதானத்தில் எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். போட்டியின் ஆரம்பத்திலிருந்து மைதானத்தின் பிட்ச் கடினமாகத்தான் இருந்தது. பவுன்ஸ் விகிதம் சற்று நேர்மாறாக தான் இருந்தது. இதனாலேயே தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா…
சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை எதிர்பாரா விதமாக நிகழ்ந்த விபத்தில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மிக முக்கிய பகுதியும் இஸ்லாமிய புனித தலமாகவும் கருதப்படும் இடங்கள் மெக்கா மற்றும் மதீனா. இதில் மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து இன்று அதிகாலை டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்து மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஹர்ராஸ் அருகே, இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அப்பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர் இக்கோர சம்பவத்தில் பலியாகியுள்ளனர். அதில் பயணம் செய்த 42 இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலங்கானா…
பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கட்டமைப்பு வசதிகள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் கடந்த சில ஆண்டுகளாகவே நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகருக்குள் வரும் வெள்ள நீராக இருந்தாலும், மழைநீராக இருந்தாலும் அந்தந்த பகுதிகளில் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் தொலைநோக்கு திட்டங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். உபரிநீர், கழிவுநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் தண்ணீர் பஞ்சமும், சில வாரங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையும் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் ஓரிரு நாள் மழையை கூட தாக்குப்…
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணிக்க வேண்டும், வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும், வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க…