Author: Editor TN Talks
ஆந்திர அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. இதையடுத்து தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் வித்யுத் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். ஆந்திர வீரர் பிருத்விராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து…
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர்கள் கண்டுகொள்ளாதது அமமுகவினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜயும் களமிறங்குவதால், கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு ஒரு மாதமாக வெளியே வராமல் இருந்தார் விஜய். கூட்ட நெரிசலுக்கு தவெகவையும் விஜய்யையும் பல கட்சிகளும் குறை கூறிய நிலையில், தவெக தரப்பு அடக்கியே வாசித்தது. அதிமுக, பாஜக கட்சிகள் விஜய் மீது தவறு இல்லை என்று கூறி வந்தன. இதனால், அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்வார் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் அதிமுக, பாஜக கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. அதிமுகவுடன் பாஜக கூட்டணி…
நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடியும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்திக்கான பணிகள் தாமதமாகவே தொடங்கின. இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்டதால் உப்பு…
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “09.11.2025 அன்று இரவு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த…
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் (வயது 44) இன்று காலை காலமானார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.
‘டிசி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் நாயகனாக லோகேஷ் கனகராஜ், நாயகியாக வாமிகா காஃபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம் முழுக்க ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக முகேஷ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘டிசி’ படத்தினை முடித்துவிட்டு தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்…
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது மார்பிங் புகைப்படங்களைப் போலி சமூக வலைதள கணக்கு மூலம் பரப்பி வந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் என்னைப் பற்றியும், என் குடும்பம் , நண்பர்கள், சக நடிகர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதை அறிந்தேன். அடிப்படை ஆதாரமற்றத் தகவல்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டிருந்தனர். என்னைக் குறிவைத்துத் துன்புறுத்துவதை அறிந்து வேதனை அடைந்தேன். இது தொடர்பாகக் கேரள சைபர் கிரைமில் புகார் செய்தேன். அவர்கள் இந்த போலி சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டு பிடித்துள்ளனர். அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதைச் செய்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் என்ற தகவல் அதிர்ச்சியாக…
திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை 25 ஆம் தேதி, ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற பெயரில் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார். இந்த பயணத்தின் 100-வது நாள் பொதுக்கூட்டம் நேற்று (நவ.9) தருமபுரியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “நான் இந்த நடைபயணத்தை தொடங்கிய போது எத்தனையோ தடைகள் வந்தது. நடைபயணத்தை தொடங்கும்போது கடுமையான மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், இந்த நடைபயணத்தின் மூலம் தற்போது பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது” என்றார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் தமிழ்நாட்டில் பின்தங்கிய சமுதாயங்கள் என்ன நிலையில் உள்ளது? யாருக்கு கல்வி கிடைத்திருக்கிறது? யாருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? என்ற விவரங்கள் தெரியவரும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக கட்சிகள் சம பலத்தில் உள்ளன. இதனால், இந்தத் தொகுதி முக்கியமாக பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேட்டூர் தொகுதியில் தான் தேமுதிக, நாதக, பாமக, பாஜக கட்சிகள் முதல் கூட்டத்தை நடத்தியுள்ளன. அந்த வகையில், மேட்டூரில் பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்வதற்காக சேலம் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இசைவு கொடுத்ததையடுத்து, அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் நிர்வாகிகள், தொண்டர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டம் நடைபெறும் நேரத்துக்கு முன்பாகவே மேட்டூர் வந்து காத்திருந்த அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன், பாஜக மாநில தலைவர்…
இன்று மாலை 5 மணி முதல் தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரிக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். மேலும், பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு நவ.7ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையான ஆம்னி பேருந்துகளை இயக்கத்தையும் நிறுத்துவதாக தமிழக அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற…