Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை
    விளையாட்டு

    ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ranji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. இதையடுத்து தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் வித்யுத் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். ஆந்திர வீரர் பிருத்விராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 20 ரன்​கள் சேர்த்​திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தமிழக அணி விளையாடத் தொடங்கியது.

    தமிழக வீரர்கள் விமல் குமார் 20, என்.ஜெகதீசன் 0, பாலசுப்பிரமணியம் சச்சின் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். சாய் கிஷோர் 0, பிரதோஷ் ரஞ்சன் பால் 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்துள்ளது தமிழக அணி.

    தற்போது மொத்தம் 107 ரன்கள் முன்னிலையுடன் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தமிழக அணி விளையாட உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணிக்கு விருப்பம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத விஜய் – விரக்தியில் அமமுக
    Next Article மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி
    Editor TN Talks

    Related Posts

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    April 22, 2026

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    April 21, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    Trending Posts

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    April 23, 2026

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    April 23, 2026

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    April 23, 2026

    5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.

    April 23, 2026

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.