Author: Editor TN Talks
கரூர் சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் இலங்கை, நேபாளம் போல தமிழகத்திலும் புரட்சி உருவாகும் என்ற வகையில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அந்தப்பதிவை 34 நிமிடங்கள் கழித்து அவரே அழித்து வி்ட்டார். இதுதொடர்பாக பொது அமைதி மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளதாகக் கூறி ஆதவ் அர்ஜூனா மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜூனா, சென்னை…
ஓபிஎஸ் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் அர்ஜூனன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழகத்திலும் செயற்படுத்த முனைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அனைத்துக் கட்சிகளும் முறியடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பரிந்துரை செய்துள்ள விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில், அதிமுக-விலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மதிமுக அலுவலகத்துக்கு…
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஹார் மக்களை தமிழகத்தில் திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இல்லாத ஒன்றை தமிழக மக்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார் எனக்கூறி, திமுக கூட்டணி கட்சிகள்மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில், “கத்தி, வீச்சரிவாள் வைத்திருக்கும் அன்புமணி கும்பல் எப்போது துப்பாக்கி ஏந்துவார்கள் எனத் தெரியவில்லை. பிஹாரில் இருந்து வந்து நிறையப் பேர் இங்கு வேலை செய்கின்றனர். பிஹாரிகள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். துப்பாக்கி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்தார். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கூறும்போது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அனைவரையும் ராமதாஸ் சந்தேகிக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் மீதான அதிருப்தி காரணமாக, வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ள தொழிலாளர்கள் மீது ராமதாஸ் வீண் பழியைப் போடுவது…
“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. திமுக எம்எல்ஏ வீட்டு பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்ட பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தின் கொலை – கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டாரா? ஓபிஎஸ்ஸை மூன்று முறை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? நாங்களெல்லாம் முன்மொழியாமல், பழனிசாமி முதல்வராக ஆகி இருக்க முடியுமா? கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி என்பது நாடறிந்த ஒன்று. தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர்…
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது; பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்து குறைந்ததால், கடந்த மாதம் 29-ம் தேதி புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் பரவலாக பெய்த மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணியளவில் நீர்வரத்து, விநாடிக்கு 925 கனஅடியாக இருந்தது. இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு 2,954 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 19.71 அடியாகவும் இருந்தது. முன்னெச்சரிக்கை…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை நான் எதிர்நோக்குகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 21 அன்று நிறைவுற்றது. இந்த கூட்டத்தொடர் 32 நாட்களில் 21 அமர்வுகளை கொண்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதனால்…
உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. அப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விழாவின்போது, வந்தே பாரத் ரயிலில் மாணவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கிய உந்து சக்தியாக இருந்து வருகிறது. இன்று இந்தியாவும் இந்த பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நான்கு புதிய வந்தே பாரத்…
வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, “முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள். சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல்…
“கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவுக்கு, “அறிவுத் திருவிழா” என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த…
ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இனறு காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது. தற்போது நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு. மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது. மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பாஜக அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.…