Author: Editor TN Talks

 ‘உதயநிதியை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுபகல் கனவாகவே இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களுக்காக வாழ்கிறோம் என்று சொல்லி, தன்னுடைய மக்களுக்காக திமுக வாழ்கிறது. 4 ஆண்டு முடிந்தும் மோசமான ஆட்சியாக உள்ளது. கோவையில் 3 பேர் இளம்பெண்ணை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதைப் பொருள் அதிக நடமாட்டம் காரணமாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் ஆட்சி நடைபெறுவதற்கு கோவை சம்பவமே சாட்சி. வரும் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். 2026-ம் ஆண்டு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் ஆசை. அது பகல் கனவு மட்டுமே‌‌. 2026-ம் ஆண்டு பாஜக…

Read More

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறினார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அதிகாரத்துடன் வட்டமடித்த பொன்முடியின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்தது. பெண்கள் குறித்து பேசக் கூடாததை பேசியதால் மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனால், அதிமுக வரவான விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் திமுகவில் ஏற்றம் பெற்றார். அவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. 35 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த பொன்முடியின் பெயர் மற்றும் புகைப்படத்தை துணிச்சலுடன் லட்சுமணன் எம்எல்ஏ தவிர்த்தார். அவரது செயல் திமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுக தலைமை வரை பஞ்சாயத்து சென்றும், லட்சுமணன் எம்எல்ஏ…

Read More

தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் – ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் உரையாடியதிலிருந்து… திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தாண்டி தங்களை வளர்த்துக் கொள்ள இடதுசாரிகள் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்? தேசிய முக்கியத்தும் வாய்ந்த பிரச்சினைகளில் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பதும் எங்களின் நிலைப்பாடு. மற்றபடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவதன் மூலம் எங்கள் செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறோம். தீவிர வறுமை அற்ற மாநிலமாக சாதனை படைத்திருக்கும் கேரள மாநிலம் அதற்கு சாட்சி. நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த ஆண்டு குறுவை சாகுபடி இரட்டிப்பு பரப்பளவில் நடந்து, உற்பத்தியும் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதிகமான நெல் உற்பத்தி என்பதால் அதற்கான திட்டமிடலை கூடுதலாக அரசு செய்திருக்க வேண்டும். திட்டமிடல் குறைபாட்டால் பல இடங்களில் நெல் மழையில்…

Read More

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளட்தில், “தமிழ்நாடு, பெண்களுக்குப் பாதுகாப்பானதா? கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது. எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த அரசை “பெண்களுக்கான அரசு” என்று கூறுவதற்கு முதல்வரும், அவரது…

Read More

டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. மின்சார பஸ்களை கடந்த 27ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அன்றைய தினமே அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இது எனக்கூறி நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தின. இருப்பினும் தனியார் பங்களிப்புடன் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த மின்சார பஸ்களுக்கு புதுவை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட மின்சார பஸ்கள் இன்று முடங்கியுள்ளன. வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா…

Read More

கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பாபுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், “எஸ்ஐஆர் எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 4ம் தேதி வரையில் அது நடைபெறுகிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நாம் தீர்மானம் போட்டு அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திற்கு நாம் சென்றிருக்கிறோம். வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சட்டப் போராட்டம் ஒரு பக்கம் என்று சொன்னாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் ஒரு…

Read More

சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார். இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு நடை​பெற்று இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ள​தாக கேரள உயர்​ நீ​தி​மன்​றமே தெரி​வித்​துள்​ளது. இதில் மிகப் பெரிய சதி நடை​பெற்​றுள்​ளது. திரு​வாங்​கூர் தேவசம் வாரிய அதி​காரி​களுக்கு மட்​டும் இதில் தொடர்பு இல்​லை. அரசு தலை​யீடும் உள்​ளது. மார்க்​சிஸ்ட் கட்​சி​யால் நியமிக்​கப்​பட்ட தேவசம் வாரி​யத்​தின் முன்​னாள் ஆணை​யர் பாது​காக்​கப்​படு​கிறார். அவரை ஏன் கைது செய்​ய​வில்​லை. முக்​கிய சதி​காரர்​களை பாது​காக்க, முன்​னாள் ஆணை​யரை கைது செய்​வது தவிர்க்​கப்​படு​கிறது. இந்த…

Read More

வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. ‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என மொத்தம் 70,311 பயனாளிகள் உள்ளனர். தற்போது 65 வயதுக்கு மேற்பட்டோரும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பணியாளர்கள் மின்னணு தராசில் எடைபோட்டுப் பொருட்களை வழங்க வேண்டும். ஆனால், திட்டம் தொடங்கிய வேகத்தில் ஏராளமான புகார்கள் வருவதாகவும், அவற்றுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது…

Read More

2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையேதான் போட்டி  இருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் 3-ம் இடத்துக்குச் செல்லும். 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். பல கட்சிகள் கூட்டணிக்காக கடந்த 3 மாதங்களாக என்னை அணுகினார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவெடுக்க டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை ஆகும். இதற்கிடையில், சில புதிய மாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அமமுக இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும். எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை தமிழகம் முழுவதும் பலப்படுத்தி இருக்கிறோம். 2019, 2021 தேர்தல்களை விட இந்த முறை வலுவாக இருப்போம். அதனால் எங்களை தவிர்த்து விட்டு…

Read More

கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக-வின் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது பற்றி பழனிசாமிக்கு கவலை இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரோடு தான் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். இந்தத் தேர்தலில் பழனிசாமி என்ற துரோக சக்தி உறுதியாக வீழ்த்தப்படும். அவரை வீழ்த்திய பிறகு எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளோடு அதிமுக மறுமலர்ச்சி பெறுவதற்கு அமமுக முனைப்போடு செயல்படும். இன்றைய திமுக கூட்டணி பலமாக இருப்பதற்கு காரணமே பழனிசாமியின் அடாவடி நடவடிக்கைகள் தான். திமுக 2021-ல் ஆட்சிக்கு வருவதற்கும், 2024 மக்களவைத்…

Read More