Close Menu
    What's Hot

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»2026 தேர்தலில் திமுக-தவெக கூட்டணி இடையே தான் போட்டி: டிடிவி தினகரன்
    தமிழ்நாடு

    2026 தேர்தலில் திமுக-தவெக கூட்டணி இடையே தான் போட்டி: டிடிவி தினகரன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையேதான் போட்டி  இருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

    விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் 3-ம் இடத்துக்குச் செல்லும். 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும்.

    பல கட்சிகள் கூட்டணிக்காக கடந்த 3 மாதங்களாக என்னை அணுகினார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவெடுக்க டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை ஆகும். இதற்கிடையில், சில புதிய மாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அமமுக இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும்.

    எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை தமிழகம் முழுவதும் பலப்படுத்தி இருக்கிறோம். 2019, 2021 தேர்தல்களை விட இந்த முறை வலுவாக இருப்போம். அதனால் எங்களை தவிர்த்து விட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.

    என்னை யார் தடுத்தாலும் துரோகத்தை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். பழனிசாமி அதிமுகவை குடும்ப கட்சியாக நடத்துவதாக செங்கோட்டையன் சொல்வது உண்மைதான். அவரது மகனும், மருமகனும் எல்லோரையும் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். எங்களது வேட்பாளர்களை கூட அணுகி அதிமுகவுக்கு அழைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    TTV dinakaran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழனிசாமி தேடிய கோப்புகள்… எப்போதோ கிழித்துவிட்டேன் – டிடிவி தினகரன் திகில் வாக்குமூலம்
    Next Article ‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள்
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    April 20, 2026

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    Trending Posts

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    April 20, 2026

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    April 20, 2026

    கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.