Author: Editor TN Talks
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் இன்று (வெள்ளிக் கிழமை) காலை சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பின்னர் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி அங்கு எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. தேர்தலுக்கு…
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகிறது. ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம்…
‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. அவருக்கும் புரியவில்லை. அவர் தொடங்கிய அமமுக கட்சியை பற்றி பேசாமல், விஜயையும், திமுகவையும் தூக்கிப்பிடித்து பேசி வருகிறார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட 10 ஆண்டு காலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தினகரன். என் முகத்தில் விழிக்கக் கூடாது என்று கூட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனால் தமிழகத்திற்கு வராமல் புதுச்சேரியில் தன்னுடைய தோட்டத்து பங்களாவில் தங்கி பதுங்கி இருந்தவர் தினகரன். ஜெயலலிதா ஒருவரை தகுதி நீக்கம்…
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் கரூர் விவகாரத்துக்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல, அதற்கு அனைவருமே பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார் அஜித். அந்தப் பேட்டியை விஜய்க்கு எதிராக அஜித் பேசியிருப்பதாக இணையத்தில் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனை மறுக்கும் வகையில் விளக்கமளித்து பேட்டியொன்று அளித்துள்ளார் அஜித். அப்பேட்டியில் அஜித், “நான் இதற்கு முன்பு அளித்த பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்கிறார்கள். எப்போதுமே விஜய்க்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். கரூரில் நடந்தது ஒரு துரதிர்ஷடவசமான சம்பவம். இதற்கு முன்பு ஆந்திராவில் திரையரங்கம், பெங்களூரு கிரிக்கெட் விழா போன்றவற்றிலும், பல நாடுகளிலும் இது போன்று நடந்துள்ளது. மேலும், பலர் என் வம்சாவளியைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். என்னைப் பிடிக்காதவர்கள்…
கோவையில் ஒரு பெண் காரில் கடத்தப்படுவது போன்று வெளியான வீடியோவால் அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், இருகூர், தீபம் நகர் பகுதியில் நேற்று (நவ.06) மாலை சுமார் 6.45 மணியளவில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை ஒரு மர்ம கும்பல் பயங்கரமாக தாக்கி வெள்ளை நிற காரில் கடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பெண் கத்திக்கதறி கூச்சலிடும் ஆடியோவுடன் கூடிய CCTV காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மற்றொரு பெண் இதை நேரில் பார்த்ததாகவும், அவர் உள்பட அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். அதில் முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து கடத்தப்பட்ட வெள்ளை நிற கார் பற்றிய தகவலை அறியும்…
50 ஆயிரத்திற்கும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தக் கூடிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. அதன் அடைப்படையில் தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், விசிக உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடம்…
பீகாரில் 121 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு பெரிய அளிவில் வன்முறையின்றி அமைதியாக நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கடந்த 40 நாட்களாக பீகார் மாநிலம் தன்வசப்படுத்தியிருந்தது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில், பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்கள் திக்குமுக்காட வைத்தனர். குறிப்பாக ஆளும் ஜக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியினர் ஒரு கோடி பேருக்கு வேலை, கல்வித் உதவித் தொகை, புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். அவர்களுக்கு சிறிதும் குறைவில்லாது, ஆர்ஜேடி-காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம், விவசாயிகளுக்கு கடன் உதவி என…
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் வெட்டப்பட்ட இளைஞரின் கை துண்டான நிலையில் 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்ட வைத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் விழாவில் நடந்த மோதலில் இளைஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு இடது கை மணிகட்டு பகுதி துண்டானது. இந்த நிலையில் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் துண்டான கையும் கொண்டு வரப்பட்டது. அவருக்கு இடது கையை 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பொருத்தி இயங்கும் நிலைக்கு கொண்டு வந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் செய்தியாளர்களை…
மனோஜ் பாண்டியனை போல் மேலும் பலர் வந்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவிலியர் கல்லூரி அமையவுள்ள இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 பள்ளிகள், 10 கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 22,807 மாணவர்கள் பயில்கிறார்கள். பழனியில் உள்ள திருக்கோயிலில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அடுத்து பழனி திருக்கோயிலில் காலை 4500 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் பழனியில் உள்ள உண்டு உறைவிடத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மூன்று வேலை உணவு வழங்கப்பட உள்ளது. கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் மேல்நிலைபள்ளியில் 980 பிள்ளைகள் பயில்கிறார்கள். இந்த இடத்தில் செவிலியர் கல்லூரி தொடங்க ஆய்வு மேற்கொண்டோம். சமயபுரத்தில்…
“தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை நாட்டில் உள்ள 4 கோடி பெண்களுக்கும் நடந்த ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியதாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சில நாட்கள் பேசினோம், பிறகு மறந்துவிட்டோம். தமிழகம்…