Close Menu
    What's Hot

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அஜித்
    அரசியல்

    எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அஜித்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajith
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் கரூர் விவகாரத்துக்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல, அதற்கு அனைவருமே பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார் அஜித். அந்தப் பேட்டியை விஜய்க்கு எதிராக அஜித் பேசியிருப்பதாக இணையத்தில் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

    இதனை மறுக்கும் வகையில் விளக்கமளித்து பேட்டியொன்று அளித்துள்ளார் அஜித். அப்பேட்டியில் அஜித், “நான் இதற்கு முன்பு அளித்த பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்கிறார்கள். எப்போதுமே விஜய்க்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். கரூரில் நடந்தது ஒரு துரதிர்ஷடவசமான சம்பவம். இதற்கு முன்பு ஆந்திராவில் திரையரங்கம், பெங்களூரு கிரிக்கெட் விழா போன்றவற்றிலும், பல நாடுகளிலும் இது போன்று நடந்துள்ளது.

    மேலும், பலர் என் வம்சாவளியைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். என்னைப் பிடிக்காதவர்கள் எப்போதுமே வேற்று மொழி பேசுபவர் என்று சொல்கிறார்கள். அதே மக்கள் என்னை தமிழன் என்று ஆரவாரம் செய்யும் நாள் வரும். நான் கார் பந்தயத்தில் பெரிய சாதனை படைப்பேன். அப்போது முழு மாநிலமும், தேசமும் பெருமைப்படும். அதற்காக என் ஆன்மாவை அர்ப்பணிக்கப் போகிறேன்.

    அனைவரும் உங்கள் குடும்பத்தை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். என் படங்களை திரையரங்குகளில் பார்ப்பது சரி என நினைத்தால் பாருங்கள். நான் ஒருபோதும் என் படங்களைப் பார்க்க மக்களை வலியுறுத்தமாட்டேன். அதே போல் அரசியலில் வாக்கு கேட்க மாட்டேன். வாக்களிப்பதை ஒரு குடிமகனின் கடமையாகவே பார்க்கிறேன். தயவுசெய்து மோட்டார் விளையாட்டுகளை ஊக்குவியுங்கள். இப்போதும் நேர்காணல்கள் அளிப்பது அவற்றை ஊக்குவிக்க மட்டுமே. எப்போதுமே படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஏனென்றால் அவை மக்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

     

    ajith#vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகதறிய இளம்பெண்.! கோவையை உலுக்கிய அடுத்த சம்பவம்!!
    Next Article ”மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்” – ஆர்.பி. உதயகுமார் காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    June 15, 2026

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    June 15, 2026

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.