Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»50 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை: அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி!
    தமிழ்நாடு

    50 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை: அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    all party
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    50 ஆயிரத்திற்கும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

    அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தக் கூடிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. அதன் அடைப்படையில் தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், விசிக உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்துவது, தனியார் சொத்துகள் சேதமானல் இழப்பீடு வழங்குவது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்குவது உள்ளிட்டவைகளை அனுமதி கோரி மனு அளிக்கப்படும் போது இணைத்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    குறைந்த ஆபத்து உள்ள இடத்தில் 200 பேருக்கு ஒரு காவலர், மிதமான ஆபத்து உள்ள இடத்தில் 100 பேருக்கு ஒரு காவலர், அதிகமான ஆபத்து உள்ள இடத்தில் 50 பேருக்கு ஒரு காவலர் நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சேதங்கள் ஏற்பட்டால், அவற்றை ஈடு செய்யும் வகையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு 3 லட்ச ரூபாயும், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு 8 லட்சமும், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுக் கட்டணம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியின் போது 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும், குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட வேண்டும். கூட்டம் நடத்தப்படுவதற்கு குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கூட்டம் நடத்துபவர்கள் கழிவறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தீயணைப்பு துறை சுகாதாரத்துறை விதியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த வேண்டுமெனில், உரை நிகழ்த்துமிடம், சிறப்பு விருந்தினர் வருகை தரும் நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்டம், ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும், அதோடு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு காவல் ஆய்வாளர் அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு எழுந்த புகார்கள், விதிமீறல்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியது உறுதி செய்யப்பட்டால், டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோ நடத்தும் போது சிறப்பு அழைப்பாளர்கள் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்தில் தடுப்பை அமைப்பாளர்களே ஏற்படுத்த வேண்டும் என்றும், வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதை தன்னார்வலர்களை கொண்டு தடுக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு 10 நாட்கள் முன்பாகவும், அங்கீகரிக்கப்படாத இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் பெறப்பட்ட நிலையில், வரும் 10ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகளை ஒருங்கிணைத்து முழுவடிவில் இறுதி அறிக்கை தயாரித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    all party meet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; வெளியான வாக்குப்பதிவு விவரம்!
    Next Article கதறிய இளம்பெண்.! கோவையை உலுக்கிய அடுத்த சம்பவம்!!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.