Author: Editor TN Talks
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் இருந்தது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ்…
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். அதன் பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த்…
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகளும் பதிவாகிய நிலையில், பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் பிற்பகல் 3 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 53.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக செரியா-பரியார்பூர் சட்டமன்ற தொகுதியில் 62.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…
காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவை விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட தயாரிப்புக்காகவும், சொந்த செலவுக்காகவும் இயக்குனர் கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் கோத்ரா என்பவரிடம் 65 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். அதை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கியிருந்த இரண்டு காசோலைகள், வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்தன. இதையடுத்து, கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா, காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கில் இருந்து கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்த போது முகுந்த் சந்த் போத்ரா மரணம் அடைந்தார். இதனால் அவரது மகன் ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்த வழக்கை…
தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளராக உள்ள சி.டி.ஆர். நிர்மல்குமார் கடந்த 2022ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை ரீ ட்விட் செய்திருந்தார். இதனையடுத்து நிர்மல்குமார் மீது வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நிர்மல்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.அறிவழகன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறினார். மேலும், இந்த பதிவால் சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிர்மல்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மியாமியில் நடந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை மீட்டெடுத்தனர். தற்போது நியூயார்க்கில் நாங்கள் சிறிது இறையாண்மையை இழந்தோம். கம்யூனிசத்திற்கும், பொது அறிவுக்கும் இடையிலான ஒரு தேர்வை எதிர்கொள்கிறது. நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். தனது நிர்வாகம் ஒரு பொருளாதார அதிசயத்தை நிகழ்த்தி வரும் அதே வேளையில், தனது எதிர்ப்பாளர்கள் சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் அதிக செலவினங்களை விரும்புகிறார்கள். நாங்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களுக்கு அதிக சம்பளத்தை விரும்புகிறோம். கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் உலகமயமாக்கல்வாதிகள் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேரழிவைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இப்போது நியூயார்க்கில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படிச் செய்கிறார் என்பதைப்…
நம் அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையில், 9 கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய கட்சியை துவக்கியுள்ளன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது, ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிராக திரும்பியதுடன் போராட்டங்கள் தீவிரமாகி வன்முறையாக மாறியதால், பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல கட்சிகள் உள்ள நேபாளத்தில், கடந்த பல ஆண்டுகளாக கடும் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. கட்சிகள் மாறி மாறி ஆதரவு அளிப்பது, திரும்பப் பெறுவது என்று சதுரங்க விளையாட்டு நடந்ததால், பல ஆட்சி மாற்றங்களை நாடு சந்தித்து வந்தது. இளைஞர்கள் போராட்டம்…
தமிழகத்தில் நாளை (நவ., 07) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * சிவகங்கை * மதுரை * திண்டுக்கல் * திருச்சி * பெரம்பலூர் * அரியலூர் * சேலம் * கள்ளக்குறிச்சி * தர்மபுரி * திருப்பத்தூர் * திருவண்ணாமலை * கிருஷ்ணகிரி நாளை (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * திண்டுக்கல் *…
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. டிராவிஸ் ஹெட், ஹேசல்வுட் என இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதனால் கேப்டன் மிட்சல் மார்ஷுடன், இன்று மாத்யூ ஷார்ட் துவக்கம் தர காத்திருக்கிறார். அதுதவிர கடந்த 3 போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருந்த ‘ஆல் ரவுண்டர்’ மேக்ஸ்வெல் வருகை அணிக்கு பலம் சேர்க்கிறது. இந்தப்…
ராகுல்காந்தி வெளியிட்ட வாக்கு திருட்டு தொடர்பான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள பிரேசில் மாடல் அழகி லாரீசா நேரி அது தொடர்பாக கிண்டலடித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். புது டெல்லியில் புதன்கிழமையான நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘H FILES’ என்ற பெயரில் ஹரியானா மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு பேசினார். The name of the Brazilian Model seen in @RahulGandhi’s press conference is Larissa. Here’s her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP — Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025 ஹரியானா மாநில தேர்தலில் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதாகவும், அதில் குறிப்பாக 8 தொகுதிகளில் மிக குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றதாகவும் தெரிவித்த ராகுல்காந்தி, பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி புகைப்படம் ஹரியானா பட்டியலில் பல…