Close Menu
    What's Hot

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»9 கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது
    உலகம்

    9 கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nepal prchnda
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நம் அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையில், 9 கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய கட்சியை துவக்கியுள்ளன.

    சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது, ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிராக திரும்பியதுடன் போராட்டங்கள் தீவிரமாகி வன்முறையாக மாறியதால், பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.

    இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பல கட்சிகள் உள்ள நேபாளத்தில், கடந்த பல ஆண்டுகளாக கடும் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. கட்சிகள் மாறி மாறி ஆதரவு அளிப்பது, திரும்பப் பெறுவது என்று சதுரங்க விளையாட்டு நடந்ததால், பல ஆட்சி மாற்றங்களை நாடு சந்தித்து வந்தது.

    இளைஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்க உள்ளது என்பதால், வரும் பொதுத்தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையி லான, நேபாள கம்யூனிஸ் ட் – மாவோயிஸ்ட் சென்டர் கட்சி தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வந்தன.

    இதன் தொடர்ச்சியாக, தற்போது, ஒன்பதுகம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற பெயரில் இயங்க உள்ளன. இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி காத்மாண்டுவில் நேற்று நடந்தது.

    நேபாள கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த சோஷலிஸ்ட், நேபாள சமாஜ்பாடி, நேபாள ஜனதா சமாஜ்பாடி, நேபாள கம்யூனிஸ்ட் – மாவோயிஸ்ட் சோஷலிஸ்ட் உள்ளிட்ட கட்சி கள் இணைந்துள்ளன.சீன ஆதரவு கொ ள்கை உடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது.

     

    nepal#politics#new party
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
    Next Article அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது: தேர்தல் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் விரக்தி
    Editor TN Talks

    Related Posts

    வாக்குறுதியை மீறிய அமெரிக்கா!. ஹார்முஸ் ஜலசந்தியில் கடும் கட்டுப்பாடு!. ஈரான் அதிரடி!

    April 18, 2026

    ஈரானுக்கு புதன்கிழமை வரைதான் டைம்!. கெடு விதித்து டிரம்ப் வார்னிங்!. 

    April 18, 2026

    ஈரானிடம் இனி கடற்படையே இல்லை; வெற்றியை நெருங்கிய அமெரிக்கா!. டிரம்ப்!.

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    Trending Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    April 19, 2026

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    April 18, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    April 18, 2026

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.