Author: Editor TN Talks
தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு- ஓசூர் இடையே தென்னிந்தியாவிலேயே இரு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டன. அதன்படி, தமிழக எல்லையில் சென்னை மெட்ரோ நிர்வாகமும்,ல கர்நாடகா எல்லையில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகமும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடகங்களுக்கான விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “பாரம்பரிய ஊடகங்களில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணிபுரிவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் பல சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. பிஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் அச்சு ஊடக விளம்பரங்களுக்கான கட்டணம் 27% உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அச்சு ஊடக விளம்பரக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம், பெரும்பாலும் அரசு விளம்பரங்களை நம்பி உள்ள பிராந்திய அளவிலான வெளியீட்டாளர்கள் உட்பட சிறிய மற்றும் பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள் பலன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அச்சு…
நம் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத் திட்டங்களுக்கு இரு மாநிலங்கள் மட்டுமே செலவழித்த நிலையில், தற்போது 12 மாநிலங்களில் அத்தகைய திட்டம் விரிவடைந்து இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 மாநிலங்களும், 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக பி.ஆர்.எஸ்., சட்டசபை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செலவினங்களால் ஆறு மாநிலங்களில் இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் உள்ள பெண் வாக்காளர்களை கவருவதற்காக, பிரத்யேக திட்டங்களை ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக அள்ளி விடுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வாக்குறுதியை ஒவ்வொரு கட்டங்களாக நிறைவேற்றி வருகிறது. 12 மாநிலங்கள் அதே போல், மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட தற்போது 12…
தமிழக மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்ட 49,429 மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது. ‘விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த 2 நாட்களுக்குள்ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘தகுதியற்றவர்கள்’ என்ற போர்வையில், சுமார் 40 சதவீத மனுக்களை நிராகரித்து, நாலாபுறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பேற்று 28 மாதங்களுக்கு இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். தங்கள் கணக்குப்படி ‘தகுதியான’ மகளிர் ஒவ்வொருவருக்கும் ரூ.28 ஆயிரத்தை தராமல் ஏமாற்றினர். நாள்தோறும் மனு கொடுக்க கால்கடுக்க நிற்கவைத்து அலைக்கழித்தனர்.…
“சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே’ என்று திட்டுகிறார்கள்” தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார். இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் என்பது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம்” என வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் அதற்கான எந்த நகர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில், இது விஷயமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி எம்எல்ஏ-வான பழனி நாடார், “இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னதால் தான் கடந்த முறை நான் வெற்றி பெற்றேன். ஆனால், அதற்கான வேலைகள் நடக்கவில்லை. கடந்த…
சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் (நவ., 04) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,05)…
பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை; இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று நான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை, அனைத்து நடைமுறைகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், விதிகளை பின்பற்றியும் தான் வெளியிடப்பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும். ஓர் அரசே அதன் தவறுகளை மறைக்க பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது. பதிவுத்துறை உதவித் தலைவர் பதவி உயர்வு தொடர்பான விஷயத்தில் நான் முன் வைத்திருந்த குற்றச்சாட்டே,’’இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியான பணிமூப்புப் பட்டியல் முறையாக வெளியிடப்படாதது தான். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டால் தான், தகுதியானவர்களுக்கு பணிமூப்பு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க முடியும். அந்த…
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அளித்த பேட்டியிலிருந்து…. அதிமுகவில் 53 ஆண்டுகாலம் பயணித்த செங்கோட்டையனை நீக்கியது சரியான முடிவா? செங்கோட்டையன் அண்ணன் ஒரு சீனியர். கட்சியில் மனஸ்தாபங்கள் இருந்தால், ஈகோ பார்க்காமல், தனிப்பட்ட முறையில் பொதுச்செயலாளரைச் சந்தித்து அதனை கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, அதிமுக-வை எதிர்க்க வேண்டும் என்று செயல்படும் ஒரு குரூப் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பேட்டி கொடுத்தது சரியா? உங்களுக்கும் மனக்குறை உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்களே… அதை பொதுச்செயலாளரிடம் எப்போது சொல்லப் போகிறீர்கள்? எனக்கு மனக்குறையே இல்லை. அப்படியே இருந்தாலும், அதை உங்களிடம் எப்படிச் சொல்வேன்? தன்மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்ன எஸ்டிஎஸ் போன்றவர்களைக் கூட எம்ஜிஆர் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அது போன்ற பெருந்தன்மை இபிஎஸ் இடம் இல்லையே? எல்லோருமே தலைவர், அம்மா ஆக முடியாது. இன்று இருக்கும் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு, இபிஎஸ் முடிவெடுக்கிறார். கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்கிறார்.…
சட்டப்பேரவை, பொதுமேடைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா இடங்களிலும், மனதில் பட்டதை வெள்ளந்தியாகப் பேசி, கலகலப்பை ஏற்படுத்தி, அனைவரையும் கவரும் இயல்பு கொண்டவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அளித்த பேட்டியிலிருந்து… சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதே..? வாக்காளர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகம் இது. தொகுதி வாரியாக நடந்த எஸ்ஐஆர் கூட்டத்தில், திமுக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் இக்கூட்டத்தை புறக்கணித்திருக்க வேண்டியதுதானே… இப்பிரச்சினையை எழுப்புவதன் மூலம் பிரதமர் மோடிஜிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு உணர்வை உருவாக்கலாம் என்று பார்க்கின்றனர். திமுக-விடமிருந்து, தமிழகத்தை மீட்டு மக்களாட்சி அமைப்போம் என்கிறாரே விஜய்? அவர் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர், அவர்களது தொண்டர்களை, உற்சாகப்படுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் அப்படித்தான் பேசுவார். பனையூரிலிருந்து அறிக்கை கொடுப்பதோடு, மக்களைச் சந்தித்து, அவர்களது உணர்வுகளையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.…
வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த ஏ.பி.நந்தகுமாரின் அதிகாரத்தை பாதியாக்கி அதை அமைச்சர் துரை முருகனின் புதல்வர் கதிர் ஆனந்துக்கு கொஞ்சம் பிரித்துக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. வேலூர் திமுகவினர் இந்தப் பாகப் பிரிவினையால் கொஞ்சம் ஷாக்காகித்தான் கிடக்கிறார்கள். இது குறித்து வேலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “தலைவரிடமும் சின்னவரிடமும் நல்ல புரிதலுடன் இருந்த ஏ.பி.நந்தகுமாருக்கு பொதுச்செயலாளரின் (துரைமுருகன்) மகன் கதிர் ஆனந்துடன் ஒத்துப்போகவில்லை. தனது மகனை எப்படியும் மாவட்டச் செயலாளராக்கி விட வேண்டும் என்பது பொதுச்செயலாளரின் நெடுநாள் ஆசை. அதற்கு தடையாக இருந்தவர் ஏ.பி.நந்தகுமார். இந்த நிலையில் அண்மையில் வேலூரில் உதயநிதி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிக்கு பந்தல், சேர், லைட் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய நந்தகுமாரிடம் நிதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘நான் மட்டும் தான் செலவு செய்யணுமா… எம்.பி கிட்டயும் கேட்டு வாங்குங்க’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.…