Author: Editor TN Talks
“பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், தேஜஸ்வி யாதவ் இன்று குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், அவர் பிஹாகார் முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான லாலு பிரசாத் யாதவ், தாய் ராப்ரி தேவி மற்றும் மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். வாக்களித்த பின்னர் பேசிய அவர், “பிஹார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.…
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 30.37% வாக்குகள் பதிவாகி உளளன. தலைநகர் பாட்னாவில் 23.71% வாக்குகள் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 30.32% வாக்குகளும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 30.04% வாக்குகளும் பதிவாகி உள்ளன. பக்ஸர் மாவட்டத்தில் 28.02%, போஜ்பூர் மாவட்டத்தில் 26.76%, தர்பங்காவில் 26.07%, காகாரியாவில் 28.96%, மாதேபுராவில் 28.46%, முங்கெரில் 29.68%, முசாபர்பூரில் 29.66%, நாளந்தாவில் 26.86%, சஹார்சாவில் 29.68%, சமஸ்திபூரில் 27.92%, சரணில் 28.52%, ஷேக்புராவில் 26.04%, சிவானில்…
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு பல்வேறு கோணங்களில் தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவர் விஜய்யையும் விமர்சிக்க வைத்துள்ளது. அதில் குறிப்பாக அவர் திமுகவை நோக்கி பேசிய, “நம்ம தலைவரு ELECTION DAY அன்னைக்கு கருப்பு சிவப்பு சைக்கிளோட வந்து உங்களுக்கு ஆதரவு கொடுக்குறேன்னு சொன்னாரே உங்களுக்கெல்லாம் வந்து நன்றியுணர்வு இல்ல?” என்ற வார்த்தைகள் “தவெக தலைவர் விஜய்யை இயக்குவது திமுக-வா?” என்ற பழைய மற்றும் தொடர் சந்தேகத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. அவர் பேசும்போது விஜய் கொடுத்த ரியாக்ஷனும் அக்கருத்திற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் வரவேற்கும் வகையிலேயே இருந்தது. அந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியது ஒரு ஒப்புதல் வாக்குமூலம். ‘2021 தேர்தலில் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து வாக்களித்ததன் மூலம் தனது கோடான கோடி ரசிகர்களை திமுகவுக்கு வாக்களிக்குமாறு குறிப்பு பிரச்சாரம்…
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உபேர் நிறுவனத்தின் ஒரு வாடகை காரில் ஏறினார். அந்தக் காரை 86 வயதான முதியவர் ஓட்டிச் சென்றார். அப்போது அவரிடம் ஓட்டுநர் பணியில் கிடைக்கும் சம்பளம் போதுமானதா என்று கேட்டுள்ளார். அப்போது அவர் கூறியது, தொழிலதிபருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவரது நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி வர்த்தகத்தை நடத்தி வருவது தெரியவந்தது. அவரது பூர்வீகம் இந்தியா என்பதும் தெரியவந்தது. 1929-ல் அவரது தந்தை பிஜி நாட்டில் தொடங்கிய வர்த்தகத்தை அவரது குடும்பத்தார் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஈட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொழிலதிபர் தினமும் இரவு நேரத்தில் உபேர் கால் டாக்ஸி ஓட்டுகிறார். இதில்…
இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது இணையும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் பிரபல நடிகர் துல்கர் சல்மான், கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்றின் ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் 50 கிலோ பிரியாணி அரிசியை, ஆகஸ்ட் மாதம் வாங்கினோம். அதில், அந்த அரிசி எப்போது பேக் செய்யப்பட்டது, காலாவதி தேதி உள்ளிட்ட எதுவும் இல்லை. அதில் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான், அரிசியை விற்ற கடை உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும் இப்பிரச்சினை காரணமாகத் தனது கேட்டரிங் தொழிலின் நம்பகத்தன்மை பாதித்துவிட்டதாகவும் பல திருமண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.…
தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி
தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் போலி வாக்காளரை திமுக அரசு சேர்த்து இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடி கிளை அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் பேசும்போது,…
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உள்ளிட்ட பாசன திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படவில்லை’ என அன்புமணி பேசினார். ஆர்ப்பாட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இன்றுடன் பாமக-வின் உரிமை மீட்பு பயணம் 100-வது நாளை நிறைவு செய்கிறது. அதையொட்டி, ஈச்சம்பாடி அணைக்கட்டு உபரி நீரை நீரேற்றம் செய்து 60 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் கோரி விவசாயிகளுடன்…
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஹோபர்ட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் 4-வது ஆட்டத்தில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் இரு போட்டிகளிலும் பந்துவீச்சில் அச்சுறுத்தல் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் கடந்த…
தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2-வது போட்டி குவாஹாத்தியில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல்,…