Close Menu
    What's Hot

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»விளையாட்டு»தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    teams
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2-வது போட்டி குவாஹாத்தியில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

    இங்கிலாந்து தொடரில் கால் பகுதியில் காயமடைந்த காரணத்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் விளையாடவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க ஏ அணி உடனான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுகிறார். இதே போல காயம் குணமான நிலையில் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் அணிக்கு திரும்பி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி சோர்ஸி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரேன்.

    india team#cricket
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்
    Next Article ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி
    Editor TN Talks

    Related Posts

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    June 16, 2026

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    June 16, 2026

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.