Close Menu
    What's Hot

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிஹார் முதற்கட்டத் தேர்தல்: காலை 11 மணி வரை 27.65% வாக்குகள் பதிவு
    இந்தியா

    பிஹார் முதற்கட்டத் தேர்தல்: காலை 11 மணி வரை 27.65% வாக்குகள் பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bhr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 30.37% வாக்குகள் பதிவாகி உளளன. தலைநகர் பாட்னாவில் 23.71% வாக்குகள் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 30.32% வாக்குகளும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 30.04% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    பக்ஸர் மாவட்டத்தில் 28.02%, போஜ்பூர் மாவட்டத்தில் 26.76%, தர்பங்காவில் 26.07%, காகாரியாவில் 28.96%, மாதேபுராவில் 28.46%, முங்கெரில் 29.68%, முசாபர்பூரில் 29.66%, நாளந்தாவில் 26.86%, சஹார்சாவில் 29.68%, சமஸ்திபூரில் 27.92%, சரணில் 28.52%, ஷேக்புராவில் 26.04%, சிவானில் 27.09%, வைஷாலியில் 28.67% வாக்குகள் பதிவாகி உள்ளன.

    முதல் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக-அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி – சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி – கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

    கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

    bihar#election
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யை இயக்கும் திமுக? ஆதவ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்!
    Next Article ”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி
    Editor TN Talks

    Related Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.