Author: Editor TN Talks

பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அவரிடம் ஆதாரம் கேட்டும் கொடுக்கவில்லை. எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது என பிஹாரில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்த பின், ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமானது. தற்போது ஹரியானாவில் லட்சக் கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வழக்கம் போல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தகவல் தொழில்நுட்ப…

Read More

அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும். அதி​முக கட்சி விவ​காரங்​களில் பழனி​சாமி​யின் மகன், மைத்​துனர், மரு​மகன் ஆகியோர் தலை​யிடு​கின்​றனர். அவர்​கள் தொகுதி வாரி​யாக சென்று கொண்​டிருக்​கின்​றனர். அவர்​களது செயல்​பாடு​கள் மூத்த நிர்​வாகி​களுக்கு இடையூறாக உள்​ளன. அதி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். என்​னுடன் யார், யார் பேசுகின்​றனர் என்​பது அவர்​களுக்​கும், எனக்​கும் மட்​டும்​தான் தெரி​யும். அதை வெளிப்​படுத்​தி​னால், அவர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள். நான் கடந்த 53 ஆண்​டு​களாக கட்​சி​யில்…

Read More

தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இலங்​கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாக​வும் பல்​வேறு கால​கட்டங்​களி​லும் பல்​லா​யிரக்​கணக்கான ஈழத் தமிழர்​கள் தமிழகத்துக்கு அடைக்​கலம் வந்தனர். உலகின் பல நாடு​கள் ஈழத் தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்​கி​யுள்​ளன. இந்​தி​யா​வில்​தான் ஈழத்தமிழ் மக்​கள் அகதி முகாம்​களி​லேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்​கிறார்​கள். தற்​போதைய தலை​முறை​யா​வது சுதந்​திர​மாக வாழ வேண்டும். அதற்கு முதல்​கட்​ட​மாக தமிழகத்​தில் தற்​போது தொடங்​க​வுள்ள தீவிர வாக்​காளர் திருத்த பணி​யின் போது தமிழகத்​தில் வசிக்​கும் ஈழத்​தமிழர்​களுக்​கு வாக்​குரிமை அளிக்க வேண்​டும். இதற்கு மத்​திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்​டும். தமிழகத்​தில் வாக்​காளர் திருத்த பணி​யில் ஈடு​படும் ஊழியர்​கள் அந்​தந்த பகு​தி​களுக்கு வரும்​போது பாமக நிர்​வாகி​கள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். தேர்​தல் அலு​வலர்​கள் நடத்​தும் கூட்​டங்களுக்கு தவறாமல் சென்று…

Read More

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி – ரஜினி காம்போ இணைகிறது. இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173 படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் மூலம், சுந்தர்.சி இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க இருக்கிறார். சுந்தர்.சி – ரஜினிகாந்த் கூட்டணியில் 1997-ம் ஆண்டு உருவான படம் அருணாச்சலம். அது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Read More

கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். அக்.31-ம் தேதி ஈரோடு சாலையை 3டி லேசர் கருவி மூலம் சாலையை அளவீடு செய்ததுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் நேரடியாக விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க கேட்டனர். நவ.1-ம் தேதி முழுக்க 3டி லேசர் கருவி மூலம் அளவீடு பணிகள் மேற்கொண்டனர். நவ.2-ம் தேதி வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கரூர் காமராஜபுரத்தில்…

Read More

வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் நாயர், ராணி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும், வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்குகள் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்தவர்களின் நடத்தை தொடர்பானது. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுத்துள்ளனர். சில வழக்குகளில் குற்றச் செயல்களில் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்திற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் புதுமையானவை அல்ல. 2010ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சில குற்றவாளிகளுக்காக…

Read More

அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது. இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். அப்​போது, நடப்பு கல்வி ஆண்​டில் ரூ.2,000 கோடியில் 10 லட்​சம் மடிக்​கணினி வழங்​குது குறித்​தும்​ எந்த ஆண்டு படிக்​கும் மாணவர்​களுக்கு முதலில் வழங்​கலாம் என்​பது குறித்​தும் ஆலோ​சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்​டுக்கான தேர்வு அட்​ட​வணை விரை​வில் வெளி​யிடப்​படும் என்று அதன் தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​கான அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் டிஎன்​பிஎஸ்​சி வாயி​லாக தேர்வு செய்​யப்​ படு​கின்​றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் கூறிய​தாவது: குருப்-4 தேர்​வில் வெவ்​வேறு அரசு துறை​களிட​மிருந்து காலிப்​பணி​யிடங்​கள் வந்த வண்​ணம் உள்​ளதால் காலிப்​பணி​யிடங்​கள் மேலும் அதி​கரிக்​கும். அதே போல், ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​விலும் காலிப்​பணி​யிட எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. முந்​தைய ஆண்டு தேர்​வு​களின்​போது இரண்டு அல்​லது 3 ஆண்​டு​களுக்​குரிய காலிப்​பணி​யிடங்​கள் சேர்த்து நிரப்​பப்​பட்ட​தால் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை அதி​கம் இருப்​பது​போல் தோன்​றி​யிருக்​கும். தற்​போது அந்​தந்த ஆண்​டுக்​குரிய காலி​யிடங்​கள் அதே ஆண்​டில் நிரப்​பப்​படு​வ​தால் காலி​யிடங்​கள் குறை​வாக இருப்​பது போல் தெரிய​லாம். மாநில அரசு பல்​கலைக்​கழகங்​களில் உள்ள ஆசிரியர் அல்​லாத பணி​யிடங்​களை​யும் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக நிரப்ப அரசு முடிவுசெய்​துள்​ளது. இதற்கான கல்​வித்​தகு​திக்கு…

Read More

பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​திருந்​தது. இதன்​படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்​ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மெகா கூட்​டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. எனவே, இந்த முதல்​கட்ட தேர்​தல் இரண்டு கூட்​ட​ணி​களுக்​கும் மிக முக்​கிய​மான​தாக உள்​ளது. முதல் முறை​யாக போட்​டி​யிடும் பிரா​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்…

Read More

2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அண்ணை தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லணிக்கம்,…

Read More